கவிஞர் கலி.பூங்குன்றன்
காஞ்சிமடம் வர இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கறுப்புக் கொடி அறிவிப்பு (18.10.1990)
மண்டல் குழு பரிந்துரை அமலாக்கத்திற்கு தடை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா சங்கராச்சாரிகள் தரிசனத்திற்கு காஞ்சிபுரம் வருவதாக இருந்ததையொட்டி காஞ்சிபுரம் வரும் அவருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்ததை அடுத்து தனது காஞ்சிப் பயணத்தை ரத்து செய்தார் நீதிபதி மிஸ்ரா.
சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு
கரூரில் கறுப்புக் கொடி (22-10-1991)
காவிரி நீர்ப் பிரச்சினைக்காக கருநாட கத்தில் வாழும் தமிழர்களைத் தாக்கும் வன்முறை யைக் கண்டிக்கும் வகையில் கருநாடகத்தைச் சேர்ந்த சிருங்கேரி சங்கராச்சாரிக்கு கரூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. தடையுத்தரவை மீறியதால் 50 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டத் தலைவர் பழ. இராமசாமி, நகரத் தலைவர் வீரண்ணன், நகரச் செயலாளர் மு.க. ராசசேகரன், விவசாய தொழிலாளரணி செயலாளர் இ.ச. தேவசகாயம், சேலம் மாவட்டத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் மற்றும் ஏராளமான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
“மதவெறியைத் தூண்டாதே” ஆர்ப்பாட்டம் (20-12-1992)
மதவெறியைத் தூண்டும் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதியைக் கண்டித்து காஞ்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.
சங்கரமடம் எதிரிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தலைமை நிலையச் செயலாளர் கலி. பூங்குன்றன் மாலை அணிவித்த பின்னர் ஆர்ப் பாட்ட நோக்கம் பற்றி தலைமை வகித்த கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, தலைமை நிலையச் செயலாளர் கலி. பூங்குன்றன் மற்றும் கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி, சிதம்பரம் கிருட்டினசாமி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
பின்னர் ஊர்வலம் புறப்பட்டு ராஜவீதி முனைக்குச் சென்றபோது காவல்துறையினர் (காவல் துறை ஆய்வாளர் ஆர். பக்தவச்சலம்) ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள தாகக் கூறினார். துணைப் பொதுச் செயலாளர் தடையை மீறுவோம் எனக் கூறினார். தோழர்கள் ஆயிரத்துக்கும் மேலாகக் கைது செய்யப் பட்டனர்.
தொலைபேசியில் சங்கரா’வும் வழக்கும் (5-11-1993)
தொலைபேசியில் ஒரு குறிப்பிட்ட எண்ணைச் சுழற்றினால் அதிலே சங்கராச்சாரியின் குரல் ஒலிக்கும் திட்டத்தை சங்கரமடம் அறிமுகப்படுத் தியது. இது மதச் சார்பின்மைக்கு எதிரானது எனக் குறிப்பிட்டு கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத் தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கில் மூத்த வழக்கறிஞர் கழகச் சட்டத் துறைத் தலைவர் தில்லை வில்லாளன் வாதாடினார்.
நரசிம்மராவுக்கு கருப்புக் கொடி
(7-5-1993)
(7-5-1993)
காஞ்சி சங்கராச்சாரியாரின் ‘கனகாபிஷேகம்’ எனும் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க காஞ்சிக்கு வருகை தந்த பிரதமர் நரசிம்மரா வுக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது.
பிற்பகல் 1.30 மணியளவில் தலைமை நிலையச் செயலாளர் கலி. பூங்குன்றன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தபின் உணர்ச்சி முழக்கங்களுடன் பேரணி நெல்லுக்காரத் தெருவிலிருந்து புறப்பட்டு கிழக்கு ராஜவீதிக்கு வந்தபோது காவல் துறையினர் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.
பூரி சங்கராச்சாரியார் கொடும்பாவி எரிப்பு!
(17-2-1994)
(17-2-1994)
பெண்களுக்கு வேதம் ஓத உரிமை கிடை யாது என்று கல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணை வேதத்தைக் கூறவிடாமல் மேடையிலிருந்து அனுப்பிய பூரி’ சங்கராச்சாரியின் கொடும் பாவியை தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எரித்துக் கைதாயினர்.
கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள், க.பார்வதி, ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், கு.தங்க மணி, தெ.வீரமர்த்தினி, திருமகள் ஆகியோருக்கு கைத்தறி ஆடைகள் அணிவித்து வழியனுப் பினார்.
பெரியார் திடலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு ஈ.வெ.கி. சம்பத் சாலையைக் கடந்தவுடன் காவல் துறையினர் சுற்றியிருந்தவர்களையும், கழகத் தோழர்களையும் தாக்கினர். பின்னர் அனை வரையும் கைது செய்து வேனில் ஏற்றி வேப்பேரி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
விதவைப் பெண்கள் தரிசு நிலமாம்!
விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்களே- ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று ‘தினமணி’ தீபாவளி மலர் பேட்டி ஒன்றில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயே ந்திர சரஸ்வதி இழிவுபடுத் திக் கூறியதைக் கண்டித்து 9.3.1998 காலை 10 மணியளவில் காஞ்சி சங்கரமடம் எதிரில் திருமகள் இறையன் தலைமையில் திராவிடர் கழக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு இராசலட்சுமி மணியம், ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், கு.தங்கமணி, அ. சித்ரா, காஞ்சி ஜெயசுந்தரி, மு. மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயிரக்கணக்கான மகளிரும், தோழர் களும், காஞ்சி சத்திரத்திலிருந்து சங்கரமடம் வரை ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
8.3.1998 இரவு காஞ்சியில் இந்த ஆர்ப்பாட்டம் குறித்த விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழகத் துணைப் பொதுச் செயலாளர் கோ. சாமிதுரை, உதவிப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன், தகவல் தொடர்புச் செயலாளர் அ. அருள்மொழி, தஞ்சை பெரியார் செல்வன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார்.
‘காஞ்சி ஜெயேந்திரரின் தரிசுக் கோட்பாட்டை எதிர்த்து ‘தினமணி’யில் (12-1-1998) சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதினார், பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். ‘ஹிட்லரும் சங்கராச்சாரி யாரும்’ என்ற தலைப்பிட்டு கடுமையாகக் கண்டித்து. ‘இந்தியா டுடே’யில் எழுதினார் எழுத்தாளர் வாஸந்தி.
அரசு விழாவில் சங்கராச்சாரியாரா? (25-11-1998)
காஞ்சிபுரத்தில் இரயில்வே அமைச்சக விழாவில் சங்கராச்சாரியார் கலந்து கொள்வதை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ரயில் நிலையம் திறப்பு மற்றும் கணிப் பொறி முன்பதிவு மய்யம் துவக்க விழா திறந்து வைப்பவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி என்று அழைப்பிதழ் போடப்பட்டு இருந்தது. மதச் சார்பற்றவர் ஒரு அரசின் விழாவில் இந்து மடாதி பதி பங்கேற்பதைக் கண்டித்து அதே காஞ்சியில், விழா அன்றே கண்டனம் தெரிவித்தது திராவிடர் கழகம்
ஆர்ப்பாட்டம் ஊர்வலம் காஞ்சி அண்ணா அரங்கிலிருந்து தொடங்கி பூக்கடை சத்திரத்தில் முடிவடைந்தது. அங்கே உதவிப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் தலைமையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை, திருச்சி, தருமபுரி, திருப்பத்தூர், சென்னை, தாம்பரம், காஞ்சி ஆகிய மாவட்டங் களிலிருந்து ஏராளமான தோழர்கள் வருகை புரிந்தனர்.
உதவிப் பொதுச் செயலாளர் இரா. குணசேகரன், தி.மகாலிங்கன், கோ. கோபால் சாமி, எம்.பி. பாலு, பழ. பிரபு, தி.இரா. இரத்தின சாமி, ஆர்.டி. வீரபத்திரன், திருப்பத்தூர் ஜெ. துரை, அ.குணசீலன், பா. தட்சிணாமூர்த்தி, ப. கவுதமன், இரா. வில்வநாதன், பூவை புலிகேசி, பா.அருணாசலம், முனு. ஜானகி ராமன், கீழக மகளிரணியைச் சேர்ந்த காஞ்சி சித்ரா, மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண் டனர். இரண்டு சங்கராச்சாரிகளும் விழாவில் கலந்து கொள்ளவில்லை! இது கழகத்திற்குக் கிடைத்த வெற்றி!
காஞ்சி கல்லூரி விடுதியில் வருணாசிரமம்
– (6-9-2001)
– (6-9-2001)
காஞ்சிமடம் நடத்தும் கல்லூரி விடுதியில் பார்ப்பனருக்கும் பார்ப்பனர் அல்லாதாருக்கும் தனித்தனி இடங்கள் – கடும் பாரபட்சம் காட்டும் வருணாசிரம கொடுமையைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தோழர்கள் கூடினர். சங்கர மடம் எதிரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக உதவிப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் மாலை அணிவித்த பின் பேரணி புறப்பட்டு காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தின் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தி.க. தலைவர்
அ.கோபால்சாமி வரவேற்றார். வழக்குரைஞர் பூவை. புலிகேசி தலைமை வகித்து உரையாற்றினார். மாநில இளைஞரணிச் செயலாளர் இரா. செயக்குமார் முன்னிலை வகித்தார். கழகப் பொருளாளர்
கோ. சாமிதுரை தொடக்கவுரையாற்றினார். உதவிப் பொதுச் செயலாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன், உரத்தநாடு இரா.குணசேகரன், க.பார்வதி, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், இராமலக்குமி, சண்முகநாதன், ஆவடி இரா. மனோகரன், குடந்தை கோவிந்தராசன் மற்றும் பலர் உரை யாற்றினர். மாவட்டச் செயலாளர் டி.ஏ.ஜி.அசோகன் நன்றி கூறினார்.
“புதிய திருவிளையாடல் புராணம்”
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார்களின் கைதுகளைத் தொடர்ந்து சென்னை – பெரியார் திடலில் தொடர் சொற்பொழிவு களை நிகழ்த்தினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் (புதிய திருவிளையாடல் புராணம்” என்னும் தலைப்பில் சென்னை – பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் – ஏற்பாடு – திராவிடர் கழகம்.
5.11.2004 – முதலாம் சொற்பொழிவு (சமூகநீதிக் கட்சி ஏற்பாடு)
3.12.2004 – இரண்டாம் சொற்பொழிவு
25.12.2004 – மூன்றாம் சொற்பொழிவு
4.1.2005 – நான்காம் சொற்பொழிவு
17.1.2005 – அய்ந்தாம் சொற்பொழிவு
8.3.2005 – ஆறாம் சொற்பொழிவு
16.4.2005 – ஏழாம் சொற்பொழிவு
மகளிர் ஆர்ப்பாட்டம் (10-1-2005)
சங்கர்ராமன் கொலை குற்றத்திற்காக மட்டுமின்றி, பாலியல் குற்றங்கள் புரிந்ததற்காகவும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியைக் கைது செய்யக்கோரி, திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. பார்வதி தலைமையில் கழக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் நடத்தினர். அனைவரை யும் காவல்துறையினர் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.
இப்படித் தொடர் போராட்ட நடவடிக்கைகளை, வருணாசிரம வெறியர்களான சங்கராச்சாரியார்களை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்டு வருகிறது. திராவிடர் கழகத்துக்கு இணையாக இன்னொரு அமைப்பு இத்திசையில் போராடியது என்பதற்கு ஆதாரமே கிடையாது. மனித சமத்துவம், மனித நேயம் உள்ள எந்தத் தனிமனிதரும் அல்லது எந்த அமைப்பும் இவ்வாறு நடந்து கொள்வதே தலைசிறந்த ஒன்றாக இருக்கமுடியும். அந்த தலைசிறந்த மானுட உரிமை இயக்கம் திராவிடர் கழகமே!
வாழ்க பெரியார்! வளர்க அவர்தம் கொள்கை!
(நிறைவு)
ஜெயேந்திரர் சரஸ்வதி கைது
11.11.2004 (தீபாவளி)
11.11.2004 (தீபாவளி)
மீண்டும் கைது – ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் கைது (23.11.2004)
அப்பு ஆந்திராவில் கைது 19-12-2004
சுந்தரரேச அய்யர் கைது 24-12-2004
ரவிசுப்பிரமணியம் கைது 27-12-2004
விஜயேந்திர சரஸ்வதி தம்பி ரகு கைது
30-12-2004
10-01-2005 விஜயேந்திர சரஸ்வதி கைது
ஜெயேந்திர சரஸ்வதி உச்சநீதிமன்றம் ஜாமீன் அளிப்பு 10.01.2005
ஜெயேந்திரர் சிறையில் இருந்தது 61 நாள்கள் 11.1.2005 மாலை 4.35 மணிக்குப் பிணையில்
விடுதலை (இராகு காலம் 3-4-30)
விஜயேந்திர சரஸ்வதிற்கு – 10-2-2005 சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்தது. (31 நாள் சிறையில் இருந்துள்ளார்)
ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் 3 வாரந்தோறும் கையெழுத்திட வேண்டும்; சென்னையை விட்டு வெளியூர் செல்லக் கூடாது.
ஆர்.எஸ்.எஸ். தடை நீக்கமும் சங்கராச்சாரியாரும்
கேள்வி: பக்தர்களின் வாழ்வில் பல அற்புதச் செயல்களைப் புரியும் பகவான், ஹிந்து மதத்துக்கு ஆபத்து என்று வரும் போது, அதைத் தடுத்ததாக சரித்திரம் இல்லையே என்ன காரணம்?
பதில்: ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டபோது பிரபல வக்கீல் டி.ஆர்.வி.சாஸ்திரியை அழைத்து தடையை நீக்க, நடவடிக்கை எடுக்கச் சொன்னவர் காஞ்சி பெரியவர். சாஸ்திரிதான் நேருவிடம் பேசித் தடையை நீக்க உதவினார் (‘துக்ளக்’ 12.5.2021, பக். 15).
வன்முறை நடவடிக்கைகளுக்காக முப்பது முறை தடை செய்யப்பட்ட கட்சிக்கு எத்தகையப் பேருதவியைச் செய்து இருக்கிறார் காஞ்சி சங்கராச்சாரியார். சங்கராச்சாரியாரின் யோக்கிதை புரிகிறதா?
நெருக்கடி நிலை காலத்தில் சங்கராச்சாரியார்களின் உதவிக்கரம்!
நெருக்கடி நிலை காலகட்டத்தில் ஆர்.எஸ்.எசு-க்குச் சங்கராச்சாரியார்கள் எப்படி எல்லாம் உதவிக்கரம் நீட்டினர்? இதோ இந்து முன்னணி மாநிலத் தலைவராக இருந்த இராம.கோபாலன் பேசுகிறார்.
“1978இல் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்” என்று திருவாளர் இராம.கோபாலன் அய்யர்வாள் எழுதினார் “நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்” என்பது அந்நூலின் பெயர் – பக்கம் 222இல் இவ்வாறு எழுதியுள்ளார்.
“போராட்ட நிதிக்கு முக்கிய பங்காக அமைந்தது ராஷ்டிரிய சுயசேவக் சங்கத்தின் குருதட்சணை. 1975-76ஆம் ஆண்டுகளில் காவிக் கொடியின் எதிரில் ஆயிரக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் அர்ப்பணித்த தொகை போராட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது. ராஷ்டிரிய சுயசேவக் சங்கம் உடல், பொருள் அனைத்தாலும் போராட்டத்தில் குதித்ததற்கு இது பெரும் சான்றாகும்.
கருநாடகத்தில் ஸ்ரீ பெஜாவர் சுவாமிகள் நெருக்கடி நிலை வந்த முதல் வாரத்திலேயே ரூ.1001 கொடுத்ததுடன், செல்லுமிடமெல்லாம் இதற்காகப் பிரச்சாரம் செய்து வந்தார். காஞ்சி காமகோடி பீடம் சிறீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமறைவு இயக்கத்திற்குப் பல விதங்களில் உதவியுள்ளார். தலைமறைவு இயக்கத்தவர்கள் அவரை அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்” என்று இராம.கோபாலன் அய்யர்வாள் எழுதியுள்ளாரே!
ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்திற்குப் பல வகைகளிலும் உதவினார்கள் சங்கராச்சாரியார்கள். உதவினார்கள் என்றால், சங்கராச்சாரியார்களும், அவர்களின் மடங்களும் எந்த உணர்வுடையவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாமே!