கொரட்டூர், ஏப்.9- தந்தை பெரியாரின் பெண்ணிய விடுதலைப் போர் சிறப்பு கருத்தரங்கம் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 467ஆவது வார நிகழ்வாக 5.4.2025 அன்று இரவு 7 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளை கழக அலுவலகத்தில், ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன் முன்னி லையில், பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வர வேற்புரையுடன் வி.சி.க.தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தே.குணாபாரதி தலைமையில் நடைபெற்றது.
தி.மு.க.தலைமைக் கழக பேச்சாளர் கவிஞர் மா.வள்ளிமைந்தன், ஆவடி நாகராசன் ஆகி யோர் உரையாற்றினர். நிகழ்வில் வீரத் தமிழ் தமிழன், அரும்பாக்கம் சா.தாமோதரன், சு.சிவ குமார், சி.ஜெயந்தி, இரா.பிச்சைமணி, வழக்கு ரைஞர் பன்னீர்செல்வம், அருள் விழியன், கருப்ப சாமி, ஆறுமுகம், சசிகுமார், வழக்குரைஞர் துரை வர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக புஷ்பா பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.