சென்னை, ஏப். 9- கூட்டுறவு சங்க தேர்தல் விரை வில் நடத்தப்படும்’ என சட்டமன்றத்தில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார்.
சட்டமன்றத்தில் நேற்று (8.4.2025) கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:-
கடன்கள் தள்ளுபடி
தி.மு.க.அரசு பொறுப் பேற்ற பின்பு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், நகைக்கடன் என மொத்தம் ரூ.19,145 கோடி தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
இதன்மூலம் 38 லட்சத்து 82 ஆயி ரத்து 734 பேர் பயன்பெற்றுள்ளனர். 2021-2022ஆம் ஆண்டில் 14 லட்சத்து 84 ஆயிரத்து 52 விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 292 கோடி பயிர்க்கடன் வழங்கப் பட்ட நிலையில் நடப்பு நிதியாண்டில் 18 லட்சத்து 20 ஆயிரத்து 340 விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரத்து 410 கோடி பயிர்க்கடன் வழங்கப் பட்டுள்ளது.
சொந்த கட்டடம்
கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்து ஆயி ரத்து 313 மகளிர் சுயஉ தவி குழுக்களுக்கு ரூ.11 ஆயிரத்து 870 கோடி கடன் வழங்கப்பட்டுள் ளது. கூட்டுறவுத்துறை யின் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் 6,215 கடைகள் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன.இதில் 3,502 கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கு இடங்கள் தேர்வு செய் யப்பட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன. மீத முள்ள 2,713 ரேஷன் கடை களும் விரைவில் சொந்த கட்டிடத்திற்கு மாறும்.
கடந்த காலங்களில் முறையாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறாத காரணத்தால் கூட்டு றவு சங்க தேர்தல் நடத்தப் படவில்லை. கூட்டுறவு சங்கத்தில் 2 கோடியே 46 லட்சத்து 14 ஆயிரத்து 949 பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.
இயற்கை மரணம், உறுப்பினராக நீடிக்க தகுதியின்மை, உரிய பங்குத்தொகை செலுத் தாமை போன்ற பல்வேறு காரணங்களுக் காக உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து ஏராளமானோர் நீக்கப் பட்ட நிலையில் தற்போது 1 கோடியே 59 லட்சத்து 3 ஆயிரத்து 966 பேர் உறுப்பினர்களாக உள்ள னர்.
நீதிமன்ற வழிகாட்டுதல் படி இவர்களில் 97 லட் சத்து 83 ஆயிரத்து 634 பேர் மட்டுமே ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை இணைத்துள்ளனர். மீதமுள்ள உறுப்பினர்க ளிடம் இந்த விவரங்களை சேகரிக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்த பணி முடிந்தததும் ஜன நாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.