திமுக மருத்துவரணி மாநில துணைச் செயலாளர் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதியின் பிறந்த நாளான 6.4.2025 அன்று திராவிடர் கழக தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், பா.நரேந் திரன், செ. தமிழ்ச்செல்வன், இரா.வீரக்குமார், வி.சி.வில்வம், கலைச்செல்வி, அண்ணாதுரை ஆகியோர் பயனாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடன் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிகுமார்.