செய்திச் சுருக்கம்

1 Min Read

97 லட்சம் வாட்ஸ்அப்
கணக்குகள் முடக்கம்..

வாட்ஸ் அப்பின் விதிகளை மீறியதாகக் கூறி பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.அய். தொழில்நுட்பம் மூலம் தவறான கணக்குகள் அடையாளம் காணப்பட்டு இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து, தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைள் எடுக்கப்படும் எனவும் வாட்ஸ் அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் பழகுநர் பயிற்சி

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. BE, Diploma B.A., B.sc, B.com, B.B.A., B.B.M., படித்தவர்கள் https://nats .education.gov.in ஏப்.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூக்கத்தை தொலைக்கும் இந்தியர்கள்

இந்தியர்களில் 3-இல் ஒருவர் தூக்கப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக Wakefit நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 4500 பேரிடம் நடத்திய ஆய்வில் 58 சதவீதம் பேர் இரவு 11 மணிக்கு பின்னரே உறங்க செல்வதும், 44 சதவீதம் பேர் விழித்தெழும்போது சோர்வாக உணருவதாகவும் தெரிய வந்துள்ளது. 18% பேர் காலை 9 மணிக்கு மேல் தான் எழுகின்றனராம். படுக்கையில் அலைபேசியை பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணமாம். நீங்க எப்படி?
அடுத்தடுத்த சந்திப்பு..

தொடரும் குழப்பம்

அதிமுக தலைவர்கள் அடுத்தடுத்து பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருவது தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்ட%A

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண