நீட் தேர்வில் வெற்றிக்கு என்சிஇஆர்டி பாடப் புத்தகம் கட்டாயம்
வெற்றி பெற்ற மாணவர்கள் பேட்டி
சென்னை, ஜூலை 7 – ‘ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகத்தை முழுமையாக படித்தால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்’ என, இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வின் முடிவு, 13.6.2023 அன்று இரவு வெளியானது. இதில், சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவரான, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபஞ்சன், 720 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார். அவரை தொடர்ந்து, சென்னை அய்.அய்.டி., வளாக பள்ளியில் படித்த, கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த கவ்ஸ்டவ் பவுரி என்ற மாணவர், 716 மதிப்பெண் பெற்று, இந்திய அளவில் மூன்றாம் இடம் பெற்றார். இவரை, கே.வி., பள்ளி முதல்வர் மாணிக்கசாமி மற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கு அழைத்து பாராட்டினர்.
சென்னை ஆகாஷ் பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெற்ற இவர், தன் வெற்றி குறித்து அளித்த பேட்டி:
சென்னை அய்.அய்.டி., வளாகத் தில் உள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளியில், பிளஸ் 2 வரை படித் தேன். என் தந்தை ரஞ்சித் பவுரி, சென்னை அய்.அய்.டி.,யில் ‘மெட் டலர்ஜிக்கல்’ இன்ஜினியரிங் துறை பேராசிரியராக உள்ளார்.
அம்மா சுஷ்மிதா லாயக், தனி யார் நிறுவனத்தில் மனிதவள பிரிவு துணைத் தலைவராக பணியாற்றுகிறார். என் பெற்றோர் தான் என் வெற்றிக்கு பெரும் துணையாக இருந்தனர். பள்ளியிலும், பயிற்சி மய்யத்திலும் சிறப்பான பயிற்சியும் வழிகாட்டுதலும் கிடைத்தன.
என்.சி.இ.ஆர்.டி., என்ற தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடப் புத்த கத்தை முழுமையாக படித்தேன்; பயிற்சி மய்யத்தின் மாதிரி தேர்வு களை அடிக்கடி எழுதினேன். இரவு நேரங்களில் விழித்து, ஒவ் வொரு நாளும் குறைந்தபட்சம் அய்ந்து மணி நேரம் படித்தேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சூர்ய சித்தார்த் என்ற மாணவர், 715 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் ஆறாம் இடம் பெற்றுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
என் தந்தை மென்பொறியாள ராக உள்ளார். என் அண்ணன், சென்னை அய்.அய்.டி.,யில் பொறியியல் கல்வி படிக்கிறார். நான் ஆகாஷ் பயிற்சி மய்யத்தில், ஒன்ப தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான நீட் பயிற்சி வகுப்பில் பங் கேற்றேன். நீட் தேர்வுக்கு தயாராகு பவர்கள் என்.சி.இ.ஆர்.டி. புத்த கத்தை முழுமையாக படிக்க வேண் டியது கட்டாயம். அதைத் தவிர வேறு புத்தகங்களில் இருந்து வினாக்கள் வருவதில்லை என்றார்.