கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

1.4.2025
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை: இந்திய கல்வி முறையை 3 சிக்கல்கள் வேட்டையாடு கின்றன. அவை, அதிகார குவிப்பு (centralization of power), வணிகமயமாக்கல் (commercialization) மற்றும் மதவாத மயமாக்கல் (communalization). இதில் மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தி இருக்கிறது என சோனியா காந்தி கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 75 வயதை எட்டுவதால் பாஜக கட்சி மரபுப்படி மோடி செப்டம்பரில் ஓய்வா..? புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆர்.எஸ்.எஸ் தீவிரம், தன்னுடைய ஓய்வை அறிவிக்கவே பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்றார் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தகவல்.
தி டெலிகிராப்:
* சிறுபான்மையினர் அல்லாத தனியார் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அதிமுகவுடன் கூட்டணி குறித்து பாஜக திடீரென பேசியது, அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என கட்சியின் பொதுக் குழுவுக்கு எதிரான நடவடிக்கை என கருத்து.
* வக்பு மசோதாவை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மோடி அரசு முடிவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் பிரதமர் மோடியை சந்திக்க டில்லி பயணம்.
* மக்களிடையே மத வெறுப்பை பாஜக தூண்டி வருகிறது என்று மம்தா குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *