சைபர் குற்றங்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பம் அறிமுகம்

1 Min Read

சென்னை, மார்ச் 29- சென்னையைச் சேர்ந்த – பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகிய ஒடிசி டெக்னாலஜீஸ் லிமிடெட், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தகவல் பாதுகாப்பு சார்ந்த தயாரிப்புகள், சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது.
இந்த நிறுவனம் இரண்டு மென்பொருள் தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஸார்கீசைன் மெயில் (xorkeesign Mail), ஸார்கீசைன் ஸ்பாட் (xorkeesign Spot) என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தயாரிப்புகள் இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகவும் முக்கியமான, பன்னாட்டு பிரச்சினைக்குத் தீர்வு அளிக்கின்றன. அத்துடன் 20 கோடி மின்னஞ்சல் பயனர்களுக்கும் 100 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் போன் பயனர்களுக்கும் இது உதவக்கூடும்.

ஒடிசி வெளியிடும் புதிய தயாரிப்புகள் இந்தப் பிரச்சினையை நேரடியாகக் கையாள்கின்றன. தங்கள் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்தி, பிற செய்திகளை அனுப்புபவர்கள் தங்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த ஒரு வழியை உருவாக்குவதன் மூலம், ஹேக்கர்கள் இனிமேல் முகமூடி அணிந்து வரமுடியாது. மேலும் இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் அதிகாரத்தைப் பெறுகின்றனர்.

பெருந்தொற்றுக்கு மத்தியில் நாம் இருந்தபோது, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டபோது நிலைமை மாறிவிடவில்லை. ஆனால் இறுதியில், அந்த அச்சுறுத்தலை முற்றிலுமாக நீக்கியது தடுப்பூசிதான். நாங்கள் வெளியிடும் மென்பொருளும் தடுப்பூசிக்கு சமம்” என இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பி.ராபர்ட் ராஜா தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *