கூட்டுறவு பொருள்களை இல்லங்களில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம் செயலி அறிமுகம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசு, தமிழ்நாடு

சென்னை,ஜூலை8 – கூட்டுறவு தயாரிப்பு பொருள்களுக்கான செயலியை அமைச்சர் பெரிய கருப்பன் அறிமுகப் படுத்தி, தொடங்கி வைத்தார்.

கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருள்களை எளிதாக சந்தைப்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் ஏது வாக தற்போது ‘கூட்டுறவு சந்தை’ எனும் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை தலைமை செயலகத்தில் 6.7.2023 அன்று தொடங்கிவைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

கூட்டுறவு சங்கங்கள் மூலம்உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கடைகளுக்கு வந்துதான் வாங்கவேண்டும் என்கிற நிலையை மாற்றி, நுகர்வோர் எளிதாக அவர்களது இல்லங்களில் இருந்தே பொருட்களை பெறுகின்ற வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 8 சங்கங்களின் உற்பத்திபொருட்கள் இதில் சந்தைப்படுத்தப்பட உள்ளன.

இச்செயலி மூலம் 64 வகையான பொருட்கள் பட்டி யலிடப்பட்டு, ஆர்டர் செய்யப்படும்போது, அவரவர் இருப்பிடங்களுக்கு உணவுப்பொருட்கள் கொண்டுவந்து சேர்க்கப்படும். இத்திட்டம் நடப்பாண்டுசட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இச்செயலியில் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் தயாரித்த 44 வகையான மளிகை பொருட்கள், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் 20 வகையான உயர்தர நுண்ணூட்டச் சத்துகள், உயிரி உரங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் நீரில் கரையும் உரங்கள் என மொத்தம் 64பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.

இச்செயலியை பொதுமக்கள்அனைவரும் பயன் படுத்தி தரமான கூட்டுறவு தயாரிப்புகளை பெற்று பயன டையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை செயலர் டி.ஜெகநாதன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், கூடுதல் பதிவாளர்கள் விஜயராணி, வில்வசேகரன், கே.வி.எஸ்.குமார், சுப்பிரமணியன், மிருணாளினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *