கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு நூல்கள் பரப்பும் பிரச்சாரம் குமரிமாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் முளகுமூடு பேரூராட்சி முளகுமூடு பகுதியில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத்தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட கழகத் துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், கழக கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், திமுக மேல்புறம் ஒன்றிய செயலாளர் சைனி கார்டன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு நூல்கள் பரப்புரைத் திட்டம்

Leave a Comment