இதய பாதிப்பு சம்பந்தமாக உடல் நலம் குன்றி தகுந்த சிகிச்சை மேற்கொண்டு வருகின்ற மேனாள் கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மாவட்ட தமிழ் சங்கத் தலைவர் பேராசிரியர் ராச.குழந்தை வேலன் அவர்களை 23.3.2025 அன்று கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட கழக தலைவர் தண்டபாணி, மாவட்ட கழக செயலாளர் எழில் ஏந்தி, மாவட்ட கழக துணைத் தலைவர் மணிவேல், நூலகர் கண்ணன் ஆகியோர் அரியாங்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.