தொடக்கம்
சென்னை விமான நிலையத்தின் புதிய பன்னாட்டு முனையத்தில் இருந்து முழு அளவிலான விமான போக்குவரத்து சேவை நேற்று முதல் தொடங்கியது.
நெருக்கடிக்கு
அய்க்கிய நாடுகள் சபையின் உலகளாவிய நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் குழுவில் இந்தியா இணைந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சேவை
சென்னை – யாழ்ப்பாணத்திற்கு இடையே ஜூலை 16 முதல் தினசரி விமானம் இயக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தகவல்.
ஒப்பந்தம்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணியின் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்களில் பொது முகவரி அமைப்பு, சிசிடிவி, தொலைத் தொடர்பு பணிக்கு ரூ.99 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கடிதம்
தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் முதல் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பாதிப்பு
பருவ நிலை மாற்றம் காரணமாக கடந்த ஓராண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா, சோமாலியா, சூடான் உள்ளிட்ட நாடுகளில தொடர் மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காரணங்களால் சுமார் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அய்.நா.வின் மனிதாபிமான நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.