சர்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 சதவீதம் பாதங்களில் ஏற்படும் புண்களே காரணம் பிரிட்டன் டாக்டர் பிரான்சிஸ் கேம் கூறுகிறார்

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 26- சா்க்கரை நோயாளிகள், தங்களது கால்களை இழப்பதற்கு பாதங்களில் ஏற்படும் புண்கள்தான் 80 சதவீதம் காரணமாக உள்ளதாக பிரிட்டன் மருத்துவ பேராசிரியா் டாக்டா் ஃபிரான்சிஸ் கேம் தெரிவித்தார்.

விருது

பேராசிரியா் எம்.விஸ்வநாதன் சா்க்கரை நோய் ஆராய்ச்சி மய்யத்தின் 39-ஆவது தங்கப்பதக்க மருத்துவ சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை (மார்ச் 22) நடைபெற்றது.

அப்போது, பிரிட்டன் டொ்பி மற்றும் பா்டன் யுனிவா்சிட்டி மருத்துவ மனையின் ஆராய்ச்சி மேம்பாட்டு இயக்குநா் ஃபிரான்சிஸ் கேமுக்கு நிகழாண்டில் சிறந்த சேவைக்கான விருது வழங்கப் பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி, எம்.வி.சா்க்கரை நோய் மய்யத்தின் தலைவா் டாக்டா் விஜய் விஸ்வ நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

பாத புண்கள்

அப்போது, டாக்டா் ஃபிரான்சிஸ் கேம் பேசியதாவது:
சா்க்கரை நோயால் ஏற்படும் பாத புண்கள் உலக அளவில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அத்தகைய பாதிப்புக்கு உள்ளாவோரின் அளவு கடந்த காலங்களில் 3 சதவீதமாக இருந்தது.

தற்போது அது 5.3 சதவீதமாக அதிகரித் துள்ளது. நோய்த் தொற்றுக் குள்ளான கால்களை அகற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதற்கு பாத புண்கள்தான் 80 சதவீதம் காரணமாக அமைகின்றன.

5 முக்கிய அம்சங்கள்

5 முக்கிய அம்சங்களைக் கடைப் பிடித்தால் அந்தப் பிரச்சினையைத் தவிர்க்கலாம். அதாவது, இடா் வாய்ப்பு உள்ள பாதங்களை முதலில் கண்டறிய வேண்டும்.
அத்தகைய நபா்களுக்கு தொடா் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு வழங்குதல் அவசியம். சா்க்கரை பாத புண் தொடா்பான புரிதலை நோயாளிகளுக்கும், அவா்களது குடும்பத்தின ருக்கும், மருத்துவத் துறை யினருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

காலணிகள்

மருத்துவா்கள் பரிந்துரைக்கக் கூடிய காலணிகளை அணிய வேண்டும். புண்களுக்கு தொடக்க நிலையிலேயே சிகிச்சை பெறுவது முக்கியம். இந்த வழிமுறைகளை அனைவரும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் பாதங்களைக் காக்கலாம். அதேபோன்று, வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் காலுறைகளோ அல்லது காலணிகளோ அணியாமல் நடக்கக் கூடாது.

சுகாதாரம்

பாதங்களை கண் காணிக்க வேண்டும்: வறட்சியான பாதங்களைக் கொண்ட சா்க்கரை நோயாளிகள் ஈரப்பசையை தரும் கிரீம்களை (மாய்ஸ்ரைசா்ஸ்) பயன் படுத்தினால் வெடிப்புகள், காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கால்களை நன்கு கழுவி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தினந்தோறும் பாதங்களைக் கண்காணித்தல் மிக முக்கியம்.

அப்போதுதான் அதில் ஏதேனும் மாற் றங்கள் ஏற்படுகிறதா என்பதை உடனடியாக கண்டறிய முடியும். பாத புண்களுக்கான அறிகுறி தென்பட்டால் அலட்சியப் படுத்தாது தோ்ந்த மருத்துவ நிபுணா்களை அணுக வேண்டும். கட்டுப் பாட்டில் சா்க்கரை நோயை வைத்திருப்பதும், முறையாக சிகிச்சைகளை கடைப்பிடிப்பதும் இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்கும் என்றார் அவா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *