செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதால் என்ன பாதிப்பு? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

2 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 8 –  அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பதால் தங்களுக்கு என்ன பாதிப்பு என்று வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய் யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியின் வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு பிரித்து வழங்கப் பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என்று தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 16ஆம் தேதி அர சாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க., மேனாள் அமைச்சர் உட்பட சிலர் வழக்கு களையும் தாக்கல் செய்தனர்.

இதற்கிடையில் கடந்த வாரம் செந்தில் பாலாஜியை அமைச்சர வையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித் தார். இந்த உத்தரவை அடுத்த 5 மணி நேரத்தில் ஆளுநர் திரும்ப பெற்றார். இதை எதிர்த்து புதிதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை திரும்பப் பெற்றதை தவறு. திரும்ப பெற்ற ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று (7.7.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள் ளது. ஆனால், அந்த உத்தரவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதி காரமில்லை. ஒன்றிய உள்துறை அமைச்சர், அட்டர்னி ஜெனரல் ஆலோசனை பெற நிறுத்தி வைக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது’ என்று மனுதாரர் தரப் பில் வாதிடப்பட்டது. 

இதையடுத்து, ஆளுநருக்கு நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க முடி யுமா? அவ்வாறு உத்தரவிட அதி காரம் உள்ளது என்று ஏதேனும் தீர்ப்பு உள்ளதா? அவ்வாறு இருந் தால் அதை தாக்கல் செய்ய வேண் டும் என்று மனுதாரருக்கு நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

பின்னர், அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடர்ந்து நீடிக்கிறார் என மனுதாரர் தரப் பில் வாதம் செய்யப்பட்டது. அதற்கு நீதிபதிகள், அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதால், மனுதாரருக்கு என்ன பாதிப்பு? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மக்கள் வரிப்பணத்தில் அவருக்கு ஊதியம் வழங்கப்படுவதாக மனு தாரர் தரப்பு பதிலளிக்கப்பட்டது. 

அவர், சட்டமன்ற உறுப்பினரு மாகவும் இருக்கிறார் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர். இதேபோல, செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கோரிய கோவா ரண்டோ வழக்குகளையும் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *