டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் மூட்டை மூட்டையாக எரிந்த பணத்தின் காட்சிப் பதிவு வெளியீடு: ஏனையோர்க்கு சட்டம் எப்படி பாயுமோ, அதே போல் நீதிபதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தலையங்க செய்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாடு முதலமைச்சரின் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டம், நமது நாட்டின் முக்கிய பிரச்சினைகளான மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவது மற்றும் ஒன்றிய அரசாங்கத்தால் அதிகாரமயப்படுத்தப்பட்டது அதிகரித்து வருவது குறித்தும் விவாதித்தது என்கிறார்கள் கட்டுரையாளர்கள் சேலம் தரணிதரன் மற்றும் தக்சனா இந்துமதி.
* ஒன்றிய அரசின் வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) செயல்படுத்தலுக்கு எதிராக திமுகவின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராசன் விரிவான விளக்கம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு ஒதுக்கீடு தருவதற்கு அரசமைப்பு (106ஆவது திருத்தம்) சட்டத்தை நிறைவேற்றிய ஒன்றிய அரசு, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பின்னரே அது நடைமுறைக்கு வரும் என்று கூறியிருந்தது.
தி டெலிகிராப்:
* பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ‘இஃப்தார்’ அழைப்பை முஸ்லிம் அமைப்பு நிராகரித்தது; வக்ஃப் மசோதாவை நிதிஷ் குமார் ஆதரிப்பதால், இந்த எதிர்வினை.
– குடந்தை கருணா