கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட ஆந்திர அரசு ஒப்புதல்

2 Min Read

சென்னை, மார்ச்.21-கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை அடுத்த மாதம் திறந்து விட ஆந்திர அரசு ஒப்பு தல் அளித்துள்ளது. இத னால் சென்னையில் தட் டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை – தேர்வாய் கண் டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளில் மொத்தம் 11.757 டி.எம்.சி.தண்ணீரை சேமித்து வைக்கலாம். கிருஷ்ணா நதி -நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு ஆண்டுதோ றும் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் – இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழுகொள்ளளவை எட்டின. பூண்டி ஏரியில் போது மான தண்ணீர் இருந்ததால் ஜனவரி மாதத்தில் தண்ணீர் திறக்க வேண்டாம் என்று தமிழ்நாடு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. மேலும் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் சென்னையில் குடிநீர் சேவை அதிகரிக்கும் என்பதால் கிருஷ்ணா தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அடுத்த மாதம் திறக்கப்படும்

அதனை ஆந்திர அரசு ஏற்றுள்ளது. அடுத்த மாதம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே வரும் மாதங்களில் சென்னையில் தட்டுப் பாடின்றி குடிநீர் வினியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூண்டி ஏரியில் தற்போ தைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3.231 டி.எம்.சி.யில் 2.745 டி.எம்.சி. தண் ணீர் உள்ளது. செம்பரம்பாக் கம் ஏரியில் 3.645 டி.எம்.சி.யில் 3.264 டி.எம்.சி.யும், புழல் ஏரி யில் 3.300 டி.எம்.சி.யில் 2.703 டி.எம்.சி.யும், சோழவரம் ஏரி யில் 1.081 டி.எம்.சி.யில் 138 மில்லியன் கன அடியும், கண் ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மில்லி யன் கனஅடியில் 413 மில்லி யன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம் உட்பட 5 ஏரிகளிலும் மொத்தம் 9.263. டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 8.454 டி.எம்.சி. தண்ணீர்இருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு முக்கிய ஏரியான கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலும் மொத்த கொள்ளளவு 1.465 டி.எம்.சி.யில் 806 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. கிருஷ்ணா தண்ணீரும் வர உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *