பனகல் அரசர் பிறந்த நாள் இன்று (09.07.1866)

2 Min Read

அரசியல்

இந்து அறநிலையத்துறையை உரு வாக்கி பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்கியவர்.

இரண்டு முறை சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த (தமிழ்நாடு) பனகல் அரசர் என்ற பெயருடன் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர், ராமராய நிங்கார்.  ஆந்திராவின் காளஹஸ்தி அருகே ஜமீன் பண்ணை வீட்டில் 1866-ஆம்  ஆண்டு, ஜூலை 9 அன்று பிறந்தார்

இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத் தில் நிலச்சுவான்தார்கள், ஜமீன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு 1912 முதல் 1915 வரை உறுப்பினராக பதவி வகித்தார். நடேசமுதலியார் இதே காலகட்டத்தில் தொடங்கிய மெட்ராஸ் யுனைட்டட் லீகில்  தன்னை இணைத்துக் கொண்டு பணியைத் தொடர்ந்தார் பனகல்.

டாக்டர் டி.எம்.நாயர், பிட்டி. தியாக ராயர் ஆகியோர் தென்னிந்திய நல உரிமை சங்கத்தை (நீதிக் கட்சி) 1917-இல் தொடங்கினர். கருத்து ஒற்று மையின் அடிப்படையில் அதில் தன்னை இணைத்துக் கொண்டார் பனகல்.

இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்துக்கு 1920இல் நடைபெற்ற முதல் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். முதல மைச்சர் சுப்பராயலு தலைமையிலான அமைச்சரவையில் அதே கால கட்டத் தில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

உடல்நிலை காரணமாக சுப்பராயலு அடுத்த ஆண்டே பெருந்தன்மையாக பதவியை விட்டு விலகிக் கொண்டார்.  இதனையடுத்து ‘பனகல்’ முதலமைச் சராக பொறுப்புக்கு வந்தார். இரண்டாம் முறையாக தேர்தலை சந்தித்து 1923-இல் மீண்டும் பனகலே முதலமைச்சரானார். வகுப்பு வாரி இட ஒதுக்கீடு, தாழ்த்தப் பட்ட சமூக மக்களை இழிவாக குறிப் பிட்டு கூறாமல் ஆதி திராவிடர் என்றே குறிப்பிட வேண்டும் போன்றவைகளை சட்டமாக்கினார். தாழ்த்தப்பட்ட பிள் ளைகளுக்கு பள்ளியில் இலவசமாக மதிய உணவு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தேவை என்றிருந்த நிபந்தனையை ரத்து செய்தவரும் இவரே!

இதே ஆண்டில்தான் பிரிட்டன் அரசு,  ராமராய நிங்காரை “பனகல் அரசர்” என்று அழைத்தது. இரண்டாவது அமைச்சரவையில் தமிழர்களுக்கும் அமைச்சரவையில் சம தகுதி வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறவே வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப் புக்கு வந்தார் தமிழரான சிவஞானம். தெலுங்கர்களுக்கென சென்னை மாகா ணத்தில் ஒரு பல்கலைக் கழகம் ஏற்படுத் திட கோரிக்கை எழுந்தபோது, அதற்கு ஆணை பிறப்பித்ததோடு, சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகம் அமையவும் உறுதுணையாக நின்றார். இவரது மறைவிற்கு தந்தை பெரியார் எழுதிய இரங்கல் அறிக்கை பனகலின் பெருமையைப் பறைசாற்றும்.

கோயில்களில் வருகிற வருமானங் களையெல்லாம் ஒரே இடத்தில் வைத்து நிர்வாகம் செய்யும் விதமாக, இந்து அறநிலையத்துறைக்கான ஒரு சட்ட வடிவை ஏற்படுத்தினார் பனகல்.  இன்றைய சென்னை விரிவாக்கத்திற்கு துவக்கப்புள்ளியை வைத்தவர் பனகல் அரசர், அவரது முன்னோக்கிய சென்னை நகரவிரிவாக்கத்தின் அடிப் படையில் இந்தியாவிலேயே முதல் முதலில் சென்னை நகரம் விரிவடைந் தது. அதன் பிறகு மும்பைபுறநகர், நவி மும்பை, டில்லி புரானா டில்லி, நயிடில்லி மற்றும் கொல்கத்தா லேக்சிட்டி ஹவுரா என பெரியளவில் விரிவடைந்தன. 

பார்ப்பனர்கள் பனகல் அரசரை “மகாமகா சாணக்கியன்” என்பார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *