தஞ்சை, மார்ச் 20 கடந்த 14.03.2025 அன்று மாலை 6.30 மணியளவில் தஞ்சை கீழவாசல் SBR பிராய்லர்ஸ் அருகில், தஞ்சை மாவட்ட, மாநகர கழக மகளிரணி சார்பில், தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 106 ஆவது பிறந்த நாள் விழா, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு, உலக மகளிர் நாள் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.அஞ்சுகம் வரவேற்பு ரையாற்றினார். தஞ்சை மாவட்ட மகளிர் அணித் தலைவர் அ.கலைச்செல்வி அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் மலர்கொடி மாநகர அணி தலைவர்
ந. கலைச்செல்வி ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். தஞ்சை மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மருத்துவக்கல்லூரி ஓய்வு பெற்ற மயக்கவியல் மருத்துவர் த.அருமைக்கண்ணு ஆகியோர் தொடக்கவுரையாற்றினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் மானமிகு அ.அருணகிரி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்செல்வன், தஞ்சை மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
கழகப் பேச்சாளர் பொறியாளர் தே.நர்மதா, அன்னை மணியம்மையாரின் தொண்டறத்தைப் பற்றியும், மும்மொழிக் கொள்கையை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் ஆணவப்போக்கை கண்டித்தும், உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வேளையில் திராவிடர் இயக்கத்தின் முதல் பெண் தலைவரான புரட்சி வீராங்கனை அன்னை மணியம்மையாரின் தொண்டறம் பற்றியும் மிக எளிமையாக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் மிக சிறப்பாக எழுச்சியுரையாற்றினார்,
ஒரத்தநாடு இரா.குணசேகரன்
மேலும் இந்நிகழ்வில் மாநில ஒருங்கி ணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாநில பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் தஞ்சை மாநகராட்சி 12 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செ. வெங்கடேஷ், தி.மு.க. டெலிபோன் கண்ணன், தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளர் இ. அல்லிராணி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், தலைமைக் கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி, பெரியார் சமூகக் காப்பணி இயக்குநர் தே.பொய்யாமொழி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரபாண்டியன் மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவர் இரா.சரவணக்குமார், மாவட்ட ப.க. தலைவர் ச. அழகிரி, மாவட்ட ப.க.செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட ப.க.துணைத் தலைவர் ஜெ. பெரியார் கண்ணன், மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் ச.சந்துரு, தஞ்சை மாநகர துணைத் தலைவர் அ.டேவிட், மாநகர கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆ.பிரகாஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.அன்பழகன், இரா.இரமணி மாநகர மகளிர் பாசறை அமைப்பாளர் திருவையாறு ஒன்றிய மகளிரணி செயலாளர் அல்பேனியா, மாநகர மகளிரணி செயலாளர் சாந்தி பழனிவேல், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை. ஸ்டாலின், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் அரங்கராசன், திருவையாறு நகர துணைத் தலைவர் கவுதமன், பெரியார் படிப்பக வாசகர் ஏ.வி.என்.குணசேகரன், மகளிரணி தோழர்கள் லெ.ஜெகதாராணி ஜெயக்குமார், ஆனந்தவள்ளி, ஜோஷ்பின் ஜான்சி ராணி, மாணவர் கழகத் தோழர் பொறியாளர் ப.யாழிசை, மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், புதிய பேருந்து நிலைய பகுதித் தலைவர் சாமி. கலைச்செல்வன், கரந்தை பகுதித் தலைவர் வெ.விஜயன் கீழவாசல் பகுதி செயலாளர் பழக்கடை கணேசன், அண்ணா நகர் பகுதித் தலைவர் இரவிக்குமார், விசிறி சாமியார் மந்திரமா ? தந்திரமா ? ஜெயமணி குமார் தீணா பகுத்தறிவு தான் சிவக்குமார் தமிழ் பேக்கரி அனிதா சிவக்குமார், பூதலூர் நகரத் தலைவர் ஜெயசித்ரா சந்தானம், அனைத்து கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அ.வெண்ணிலவு நன்றி கூறினார்.