காசா, மார்ச் 19 காசா மீதான இஸ்ரேலின் ‘கொடிய’ வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் வரம்பற்ற அரசியல் மற்றும் ராணுவ ஆதரவே காரணம் என்று ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை ஹமாஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டிய இஸ்ரேல், போர் நிறுத்தத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக காசா மீது கடுமையான வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள், பெண்கள் உட்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் இந்தக் கொடிய தாக்குதல்களுக்கு அமெரிக்கா வழங்கிய வரம்பற்ற அரசியல் மற்றும் ராணுவ ஆதரவே காரணம் என்றும் ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
அய்.நா தூங்குகிறதா? காசாவின்மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் பெண்கள், குழந்தைகள் உட்பட 400 பேர் உயிரிழப்பு
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
