சென்னை, மார்ச் 18- சென் னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, வீராணம் உள்ளிட்ட ஏரிகளில் மொத்தம் 10
டி.எம்.சி. குடிநீர் கையி ருப்பில் இருப்பதால் கோடையில் தங்கு தடை யின்றி குடிநீர் வினியோகிக்க முடியும் என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
குடிநீர் ஏரிகள்
சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய்கண் டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப் படுகிறது.
இதில் பூண்டி ஏரிக்கு தமிழ்நாடு அரசு ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 12 டி.எம்.சி.நீர், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படுகிறது.
அதேபோல், பருவமழை மூலம் கிடைக்கும் நீர் இந்த ஏரிகளின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரித்து வருவதால், ஏரிகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரும் ஆவியாவதற்கும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் போதிய அளவு நீர் கையிருப்பில் இருப்பதால் தங்குதடையின்றி குடிநீர் வினியோகிக்க முடியும்.
கோடையில் தங்கு தடையின்றி குடிநீர்
பூண்டி 2.75 டி.எம்.சி., சோழவரம் 138 மில்லியன் கன அடி, புழல் 2.73
டி.எம்.சி., கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை 416 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் 3.19
டி.எம்.சி., வீராணம் 784 மில்லியன் கன அடி உள்பட 10 டி.எம்.சி. கையிருப்பில் உள்ளது.
தற்போது வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் குடிநீரின் தேவையும் படிப் படியாக அதிகரித்து வருகிறது. எனவே கோடையில் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதற்கு தேவையான குடிநீர் ஏரிகளில் உள்ளது. தற்போது சென்னை மாநகருக்கு 1.072 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதிநீர், தற்போது நிறுத்தப்பட்ட நிலையில், 35 அடி ஆழம் கொண்ட பூண்டி ஏரியில் 33.79 அடி நீர் இருப்பு உள்ளது.
அதேபோல் சோழவரம் 3.20 அடி, புழல் 18.62 அடி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை 34.01 அடி, செம்பரம்பாக்கம் 22.27 அடி, வீராணம் 12.70 அடி நீர் இருப்பு உள்ளது. மேற்கண்ட தகவல்களை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.