காரைக்கால், மார்ச் 18- காரைக் கால் மாவட்ட கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் நடத்திய உலக மகளிர் தின விழா பேச்சுப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு, .பெரியாரின் பெண்ணுரிமை, என்றும் தேவை பெரியார், பெரியார் காண விரும்பிய சமுதாயம்.பெரியார் கண்ட புரட்சிப் பெண். சுய சிந்தனையாளர் பெரியார் ஆகிய தலைப்புகளில் பேசினார்கள்.
மாணவர்கள் அய்ந்து நிமிடம் பேசுவதற்கு ஏழு, எட்டு, பக்கம் குறிப்பு எடுத்துக் கொண்டு கொடுத்த நேரத்தையும் கடந்து உற்சாகமாக பேசி மகிழ்ந்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ – மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையாளர்கள் அனைவரையும் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பொன்.பன்னீர்செல்வம். புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையேற்று நிகழ்வை தொடங்கி வைத்தார்.
கழக மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் இள மாறன் தொடக்க உரையாற்றினார். கழக பேச்சாளர் தேவ. நர்மதா சிறப்புரை ஆற்றினார். திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலா ளர் நாத்திக.பொன்முடி, திருவாரூர் திரு.வி.க. அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி பேராசிரியர் கா.அகிலா, நிரவி அரசு தலைமை மருத்துவர் ஜெ.வைக்கமதி, மாவட் டத் தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி. ஆகியோர் நடுவர்களாக இருந்து பேச்சுப் போட்டியை நடத்திக் கொடுத்தனர்.
புதுச்சேரி மாநில மேனாள் கல்வித்துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் வருகை தந்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். இந்த விழாவை கழகத் தோழர்கள் மிக வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இதில் கலந்துகொண்டு பெரியாரைப் பற்றி படித்து இங்கே பேச வந் திருப்பது பெரியாரை இந்த இளைய சமுதாயம் தெரிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திராவிடர் கழகத் தோழர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்துரையில் பேசினார். காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சுப்போட்டி மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கி நான்கு மணிக்கு நிறைவு பெற்றது. நடுவர்களின் தேர்வுக்கு பிறகு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மண்ணம்பந்தல் ஏவிசி கல்லூரியை சார்ந்த மாணவி எம்.கார்த்திகா முதல் பரிசும். காரைக்கால் அவ்வையார் அரசு பெண்கள் கல்லூரி மாணவி ஜ. நுஸ்ரத் பாத்திமா இரண்டாம் பரிசும். மண்ணம்பந்தல் ஏவிசி கல்லூரியை சேர்ந்த மாணவர் நா.சத்தியப் பிரியன் மூன்றாம் பரிசும் பெற்றார்கள்.
சிறப்பு பரிசாக மோகன்ராஜ் ராஜலட்சுமி, சுஜிதா, ரம்யா ஆகி யோர்க்கு வழங்கப்பட்டது. பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி இறுதியில் காரைக்கால் மாவட்ட திராவிட மாணவர் கழக துணை செயலாளர் சசிகுமார் நன்றி உரை வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட காப்பாளர் அன்பானந்தன், மாவட்ட துணைத் தலைவர் பதிஜெய்சங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் மு.பி.பெரியார் கணபதி, மாவட்ட இளை ஞரணி செயலாளர் ஆ.லூயிஸ்பியர், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மு.க.ஸ்டாலின், மாணவர் கழகத் தோழர்கள் மனோ, ரஞ்சித், பெரியார் பெருந்தொண்டர் பன்னீர் செல்வம் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.