சங்கராபுரம், மார்ச் 18- சங்கராபுரம் மும்முனை சந்திப்பில், 17.03.2025 திங்கள் கிழமை மாலை 4.30, மணிக்கு, ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ்நாட் டுக்குத் தரவேண்டிய கல்வி நிதியை தரமறுக்கும் அடாவடி ஒன்றிய அரசைக் கண்டித்தும் சங்கராபுரம் வட்ட தமிழ் அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கல்லக்குறிச்சி மாவட்ட கழக காப்பாளரும், ம.சுப்பராயன் தலைமை வகித்தார். சங்கராபுரம் சங்கைத் தமிழ்ச் சங்க செயலாளர் பாவலர் ச. சாதிக் பாட்சா வரவேற்பு ரையாற்றினார்.
மாவட்ட வணிகர் சங்க பொருளாளர் ரொட்டேரியன் இராம.முத்துக்கருப்பன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட செயலாளர் ம.குணசேகரன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர் ஆ. இராமலிங்கம், சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்கத் துணைத் தலைவர் நா.கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த் தும், தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய பெஞ்சல் புயல் நிதி, மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதி,கல்விக்கான நிதி கொடுக்காமல் வஞ்சித்து வரும் அடாவடி ஒன்றிய அரசைக் கண்டித்தும் மாவட்ட கழக இலக்கிய அணித்தலைவர் புலவர் பெ.சயராமன், சங்கராபுரம் நகர திருக்குறள் பேரவை செயலாளர் ஆ.இ லட்சுமிபதி, சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் வை செழியன், தேவபாண்டலம் கார்குழலி நினைவு கல்வி அறக்கட்டளை நிறுவனர் இராசு தாமோதரன், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சவுந்திரராசன், கற்க கசடற கலை இலக்கியக் கழகத் தலைவர் தேவ.திருவருள், முனைவர் தெ. சாந்தகுமார் ஆகியோர் பேசினர்.
இக்கூட்டத்தில் சங்கராபுரம் ஒன்றிய கழக செயலாளர் கே. மதியழகன்,சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் செ. ஆண்டப்பன், விருகாவூர் தமிழ்ச்சங்க தலைவர் தமிழ்ச்செம்மல் சண்முகம் பிச்சை பிள்ளை, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அ.சம்சுதீன், இருசிவந்தியம் ஒன்றிய கழக தலைவர் அர
சண்முகம், சங்கராபுரம் நகர கழக தலைவர் கலை அன்பரசு மூங்கில் துறைப்பட்டு நகர திரா விடர்கழகத் தலைவர் நூ.சலீம், ஆசாத் அலி,செ.இராதாகிருட்டினன்,பாரதி கிருட்டினன்,வீரன், மாவட்ட சிறுபான்மை யினர் நல உரிமைப்பிரிவு திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் அய்.ல்பிகார்அலி, குளத் தூர் தோழர்கள்:பி.கோவிந் தன், நா.ஆறுமுகம்,கு.குப்புசாமி,ச.முனியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்க துணைச் செயலாளர் கோ சக்திவேல் நன்றி கூறினார்.