சோழிங்கநல்லூர், மார்ச் 16- சோழிங்கநல்லூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 9.3.2025 காலை 10 மணிக்கு விடுதலை நகர் நூலகத்தில் மாவட்டத் தலைவர் வே.பாண்டு தலைமையில், மாவட்டக் காப்பாளர் இரா.தே.வீர பத்திரன் முன்னிலையில் கடவுள் மறுப்பு கூற தொடங்கியது,
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வைக்கம் போராட்டம் வெற்றி நூற்றாண்டு விழா மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவினை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. சிதம்பரத்தில் நடந்த கழகப் பொதுக்குழு தீர்மானங்களின்படி பள்ளிக்கரணை மற்றும் மேடவாக்கதில் புதிய கிளைக் கழகங்களை ஏற்படுத்துவது, கிராமப் பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
விஜய் உத்தமன்ராஜ் (செயலாளர்), க.தமிழினியன் (துணைத் தலைவர்), ஜெ.தேவி (மகளிரணித் தலைவர்), நித்யானந்தம் (இளைஞரணித் தலைவர்), அரசு (பகுத்தறிவாளர் கழகம்), மணிகண்டன் (தொழிலாளர் அணி), அரங்க ராஜா (மேடவாக்கம்), ராஜேந்திரன் (ஓட்டுநர்) பங்கேற்றனர். நிறைவாக மாவட்ட மகளிரணித் தலைவர் ஜெ.தேவி நன்றி கூறினார்.