சென்னை, மார்ச் 15 தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
2025–2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (15.3.2025) காலை 9.30 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்த பின்னர், காலை சரியாக 9.30 மணிக்கு அவை நிகழ்வு தொடங்கியவுடன், பேரவைத் தலைவர் மு.அப்பாவு எழுந்து, 2025–2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் பேரவைக்கு அளிப்பார் என அறிவித்தார். அதையொட்டி, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எழுந்து, 64 பக்கங்கள் கொண்ட நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வாசித்தார்.