சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவை

1 Min Read

சென்னை, மார்ச் 15- தமிழ் நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் 13.3.2025 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சவுதி அரேபிய அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவத்துடன் பி.எஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலி யர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 27.4.2025 முதல் 30.4.2025 வரை கொச்சியில் நடைபெற உள்ளது. இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலை களுக்கான பணி காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in-இல் பார்க்கலாம். மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலை பேசி எண்-6379179200, 044-22502267 வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுய விவர விண்ணப்பப் படிவம், கல்வி சான்றிதழ் பாஸ்போட் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை [email protected] என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு 18-4-2025க்குள் அனுப்பி வைக்க வேண்டும். Saudi Professional Classification, HRD & Dataflow முடித்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது முகவர்களோ கிடை யாது. விண்ணப்பதாரர்கள் நேரிடை யாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையலாம். தேர்வு பெறும் பணியாளர்களிடம் இருந்து சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும். இவ்வாறு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *