பொள்ளாச்சி, மார்ச் 15- பொள்ளாச்சி மதிமுக மாவட்ட அலுவலகத்தில் 08-03-2025 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் நடை பெற்றது மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்று உரை ஆற்றினார்.
பொள்ளாச்சி மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் பொள்ளாச்சி பரமசிவம், பொதுக்குழு உறுப் பினர் செழியன், மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள். கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கழக செயல்பாடுகள் குறித்து கருத்துரை வழங்கினார்.
பொள்ளாச்சி நகர தலைவர் வடிவேல், பொள்ளாச்சி நகர செயலாளர் நாகராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன் குமார், மாணவர் கழகத் தோழர் திவ்ய வாசுகி, பகுத்தறிவாளர் பொறுப்பாளர்கள், மகாலிங்கம், பெருமாள் ஆகியோர் உரையாற்றினார்கள்.
பொள்ளாச்சி பரமசிவம் உடற்கொடை
மாவட்ட காப்பாளர் பொள் ளாச்சி பரமசிவம் தனது இறப்புக் குப் பிறகு கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன் பாட்டிற்காக உடற்கொடை வழங்கிட முறையாக பதிவு செய்து அதன் பதிவு பத்திரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
மாவட்டச் செயலாளர் ரவிச்சந் திரன் ஒரு விடுதலை சந்தா வழங் கினார்.
தீர்மானங்கள்
தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் நந்தலாலா, கோவை வசந்தம் ராமச் சந்திரன் அவர்களின் துணைவியார் ரங்கநாயம்மாள் ஆகியோர் மறைவிற்கு இந்த கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
15-02-2025 அன்று சிதம்பரத்தில் நடை பெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுவது என தீர்மானிக் கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடு தலைக்கு திருச்சி மாவட்டத்தில் முடிவடைந்த சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி உயர பெரியார் சிலையுடன் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு பொள்ளாச்சி மாவட்டத்தின் சார்பாக பெருமளவில் நிதி வசூல் செய்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி மாவட்டத்தில் கிராமம் முதல் பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழகப் பிரச்சாரக் கூட்டங்களை பரவலாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு, பண்பாட்டு பாதுகாப்பு பரப்புரை பயண வரவேற்பு பொதுக்கூட்டம் ஏப்ரல் 22 அன்று மேட்டுப்பாளையத்தில் தோழர்கள் அனைவரும் பங் கேற்று சிறப்பிப்பது என முடிவு செய் யப்படுகிறது.