சென்னை, மார்ச்.14- தமிழ்நாடு தனி நபர் வருமானத்தில் முத்திரை பதிக்கிறது என்றும், தேசிய வளர்ச்சியை விட, தமிழ் நாட்டின் வளர்ச்சி அபாரமாக இருப் பதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை
ஒன்றிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள், நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதே போல் தமிழ்நாடு சட்டமன்றத் தில் இன்று (14.3.2025) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு தயாரித்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (13.3.2025) வெளியிட்டார்.
இந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சம் வருமாறு:-
* கடந்த 2023-ஆம் ஆண்டு உலக பொருளாதாரம் 3.33 சதவீதம் என்ற வளர்ச்சியில் இருந்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2022-2023-இல் 7.61 சதவீதமும், 2023-2024-இல் 9.19 சதவீதமும், 2024-2025-இல் 6.48 சதவீத வளர்ச்சியையும் எட்டியது.
ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி 2021-2022-இல் இருந்து 8 சதவீதத்திற்கு மேலான வளர்ச்சி விகிதத்தை எட்டி வருகிறது. 2024-2025 ஆண்டி லும் 8 சதவீத வளர்ச்சிக்கு மேலான வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்து இருக்கிறது.
தனிநபர் வருமானம் அதிகம்
* இந்தியாவின் நிலப்பரப் பில் வெறும் 4 சதவீதமும். மக்கள் தொகையில் 6சதவீதம் மட்டுமேகொண்டுள்ள தமிழ்நாடு 2023-2024-ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.21 சதவீதம் பங்களித்துள்ளது. 2023-2024-இல் மாநிலஉள்நாட்டு உற்பத்தியா னது நடப்பு விலையில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது. பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71 சதவீத மாகவும். உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33 சதவீத மாகவும் உள்ளது.
* தமிழ்நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சியானது பல ஆண்டுகளாக தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. 2022-2023-இல் ரூ.2.78 லட்சமாக இருந்தது. இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தை காட்டிலும் 1.64 மடங்கு அதிகமாகும்.
மோட்டார் வாகன தொழிற்சாலை
* மாநிலத்தின் பொருளா தார வளர்ச்சியானது மாநி லம் முழுவதும் உள்ள நகர்ப்புற மய்யங்களில் பரவலாக் கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, மதுரை, திருப்பூர், திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.
* 2030-ஆம் ஆண்டிற்குள் 85 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை எட்டுவதை தமிழ்நாடு இலக்காகக் கொண்டுள்ளது.
*தமிழ்நாட்டில் 2019-2020-இல் 6சதவீதம் என்று இருந்த நகர்ப் புறப் பணவீக்கம் 2024-2025-இல் 4.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. கிராமப்புற பண வீக்கம் 5.4 சத வீதமாக அப்படியே உள்ளது.
* மொத்த உற்பத்தி துறையில் தமிழ்நாட்டில் பங்களிப்பு 11.90 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. உதயம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட 35.56 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவ னங்களுடன் தமிழ்நாடு 2023-2024-இல் தேசிய அளவில் இரண் டாம் இடத்தைப் பிடித்துள் ளது. மோட்டார் வாகனங் கள் மற்றும் வாகனங்கள் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் 1,500 உள்ளன.
ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள்
*மோட்டார் வாகன உற்பத்தி, ஆடைகள், தோல் பொருள்கள் ஆகிய வற்றில் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மின்னணு தயாரிப்பில் 2-ஆம் இடக்கில் உள்ளது. தமிழ் நாட்டின் மொத்த தொழிலாளர்களில் 15.97 சதவீதம் உற்பத்தியிலும், 17.2 சதவீதம் கட்டுமானத் துறையிலும் உள்ளார். அதன் காரணமாக உற்பத்திதுறை 8.33சதவீதமும், கட்டுமானத்துறை 9.03 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
2024-ஆம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு வெற் றிகரமாக நடத்தப்பட்டு ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு கள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 14.55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2019-2020 முதல் 2023-2024 வரையான காலத்தில் தமிழ் நாட்டின் தொழில் துறைக்கு வர்த்தக வங்கிகள் அளித்துள்ள கடன் ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.01லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது அந்நிய நேரடி முதலீடு ரூ.5,909 கோடி யில் இருந்து ரூ.20,157 கோடியாக அதிகரித்துள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை குறித்து திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
சமூக திட்ட செலவு ரூ.1.16 லட்சம் கோடி
“இந்த ஆய்வறிக்கையில் சமூக திட்டத்திற்கான செலவினங் களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் 2019-இல் ரூ.79,859 கோடியில் இருந்து 2023-2024-இல் ரூ.1.16 லட்சம்
* கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத்திட்டம், மகளிர் விடியல் பயணத்திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் உரி மைத் தொகை திட்டம் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக் கப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்
பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டின் 5-ஆவது பெரிய துறையாக விவசாயம் உள்ளது என்றும், அதன் பங்களிப்பு ரூ.1.5 லட்சம் கோடியாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு எண்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தித்திறனில் முதலிடத்திலும், மக்காச்சோள உற்பத்தித் திறனில் இரண்டாம் இடத்திலும், நெல் உற்பத்தித்திறனில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
விவசாயக் கடன் 2019-2020-ல் ரூ.1.83 லட்சம் கோடியிலிருந்து 2023-2024இல் ரூ.3.58 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2023-2024-ஆம் ஆண்டில் தோட்டக்கலை பயிர்களுக்கான மொத்தப் பரப்பளவு 16.3 லட்சம் எக்டேர் அளவை எட்டி உள்ளது. கால்நடைத் துறையின் மொத்த மாநில மதிப்புக்கூட்டல் ரூ.1.35 லட்சம் கோடியாக இருக்கிறது என்றும். இந்தியாவின் முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும். இறைச்சி உற்பத்தியில் 6-வது இடத்திலும் உள்ளது தமிழ்நாடு 1.34 லட்சம் டன் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்து 2023-2024இல் ரூ.6,854 கோடி வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தனி நபர் வருமானத்தில் முத்திரை பதிக்கிறது தேசிய வளர்ச்சியைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகம் பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

Leave a Comment