திண்டுக்கல், மார்ச் 14- திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள குடகனாறு இல்லத்தில் 08.03.2025 அன்று மாலை மிகுந்த எழுச்சி யுடன் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.சக்திசரவணன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன், மாவட்ட துணைத் தலைவர் த.கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் இரா.ஜெயபிரகாஷ், மாநகரத் தலைவர் அ.மாணிக்கம், மாநகர செயலாளர் தி.க.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயலாற்றுவது குறித்தும், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை உலகமயமாக்கும் பெரும் பணியில் தமிழர் தலைவர் அவர்களின் ஆஸ்திரேலியா பயணம் குறித்தும், ஒன்றிய பொறுப்பாளர்கள் அந்தந்த ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்வது, பெரியார் உலகத்திற்கு நன்கொடைகள் திரட்டி வழங்குவது, தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளினை கொள்கை பெருவிழாவாக கொண்டாடுவது குறித்தும் மற்றும் பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறி உரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.பாண்டியன், நத்தம் ஒன்றிய தலைவர் எம்.ஆர்.பி.செல்லம், திண்டுக்கல் நகர இளைஞரணி தலைவர் கோ.சரவணன், ஆத்தூர் ஒன்றிய தலைவர் கா.நாகேந்திரன், வத்தலக்குண்டு ஒன்றிய தலைவர் க.சுந்தர், திண்டுக்கல் நகர துணைச் செயலாளர் செபாஸ்டின் சின்னப்பர், திண்டுக்கல் ஒன்றிய தலைவர் ச.பொன்ராஜ், ஆர்.காஞ்சித்துரை, நரசிங்கன், சிதம்பரம், வி.ராமசாமி, இரா.ஜவகர், சாம்சன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.வல்லரசு நன்றியுரை ஆற்றினார்.
தீர்மானங்கள்
சிதம்பரம் நகரில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை ஏற்று சிறப்பாக செயலாற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களை உலகமயமாக்கும் பெரும் பணியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நல்ல உடல் நலத்தோடு வெற்றிகரமாக செயல்பட இக்கூட்டம் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறது.
அறிவுலக ஆசான் தந்தை பெரியாரை 95 ஆண்டுகாலம் வாழ வைத்த தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழாவினை 10.03.2025 அன்றும், அன்னையாரின் நினைவு நாளினை 16.03.2025 அன்று கொள்கை பெருவிழாவாக கொண்டாடி மகிழ்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
புதிய பொறுப்பாளர்கள்.
திண்டுக்கல் ஒன்றிய தலைவர் ச.பொன்ராஜ், நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் பழ.நாகராஜ், ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், வத்தலக்குண்டு ஒன்றிய தலைவர் க.சுந்தர், சாணார்பட்டி ஒன்றிய தலைவர் ந.சின்னச்சாமி, ஒன்றிய செயலாளர் கே.பி.கணேசன், நத்தம் ஒன்றிய தலைவர் எம்.ஆர்.பி.செல்லம், ஆத்தூர் ஒன்றிய தலைவர் கா.நாகேந்திரன், கொடைக்கானல் ஒன்றிய தலைவர் பா.கருப்பையா, திண்டுக்கல் நகர இளைஞரணி தலைவர் கோ.சரவணன், மாவட்ட மகளிர் அணி தலைவர் பொ.நாகலட்சுமி, மகளிர் அணி செயலாளர் செ.பானுமதி, துணைத் தலைவர் தனம், துணைச் செயலாளர் திராவிட மணி,
மாவட்ட மாணவர் கழகத் தலை வர் நா.இனியவன், மாணவர் கழகச் செயலாளர் விக்னேஷ், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் நத்தம் வர்சினி ஆகியோர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் ஒரத்தநாடு. இரா.குண சேகரனால் நியமிக்கப்பட்டனர்.