கன்னியாகுமரி, மார்ச் 12- கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக கழக மேனாள் தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத்தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்கவுரையாற்றினார்.
மாவட்ட கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு மாவட்ட தலைவர் இனிப்புகள் வழங்கினார். கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை உரையாற்றினார்.
கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர் நன்றி கூறினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.அய்சக் நியூட்டன், எஸ்.அலெக்சாண்டர், மாநகர திராவிடர்கழக தலைவர் ச.ச கருணாநிதி, இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், கழகத் தோழர்கள் மு.குமரிச்செல்வன், பா.சு. முத்துவைரவன், பிராங்கிளின் மற் றும் பெரியார் பற்றா ளர்கள் பலரும் கலந்து கொண்டனர்