மன்னார்குடி. மார்ச் 12- மன்னார்குடி தந்தைபெரியார் படிப்பகத்தில் 23.2.2025 அன்று மாலை 7 மணிஅளவில் மன்னார்குடி மாவட்டத் கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம் தலைமை வகித்தார். கழக மாவட்டத்தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், கழக மாவட்ட துணைத் தலைவர் நா.இன்பக்கடல், கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், கழக மாவட்டதுணைச்செயலாளர் வீ.புட்பநாதன், கழக பொதுக்குழு உறுப்பினர் சு.சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர்
.இரா.ஜெயக்குமார் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தையும், கழகத்தின் பிரச்சாரத் திட்டங்களையும் பற்றியும், பிப்ரவரி 15 சிதம்பரத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களைச் செயல்படுத்துவது தொடர்பாகவும், கிராமங்கள், பேரூராட்சிநகராட்சி போன்ற பகுதிகளில் கழகப் பிரச்சார கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவது தொடர்பாகவும், திருச்சியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு அதிகமான நிதியினை வசூல் செய்து வழங்கிட வேண்டும் எனவும், இனமான ஏடான விடுதலை ஏட்டிற்கு முடிந்துள்ள சந்தாவினையும், புதிய சந்தா வினையும் உடனடியாக வசூல் செய்து வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தி கருத்துரையாற்றினார்கள்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மன்னார்குடி நகரச் செயலாளர் மு.இராமதாஸ் மறைவிற்கும், நீடாமங்கலம் நகர செயலாளர் கி.இராஜேந்திரன் தந்தையார் கிருஷ்ணனுடைய மறை விற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
15.2.2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை ஏட்டிற்கு மன்னார்குடி மாவட்டத்தில் முடிவடைந்துள்ள சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது எனவும் விடுதலைக்குப்புதிய சந்தாக்களை வசூல் செய்து வழங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி உயர பெரியார் சிலையுடன் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு மன்னார்குடி மாவட்டத்தின் சார்பில் பெருமளவில் நிதி வசூல் செய்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது
மன்னார்குடி மாவட்டத்தில் கிராம முதல் பேரூராட்சி நகராட்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கழகப் பிரச்சாரக்கூட்டங்களைப் பரவலாக நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.
கூட்டத்தில் மன்னார்குடி நகர திராவிடர் கழகச் செயலாளராக வே.அழகேசன் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கலந்துகொண்டோர்
மன்னை நகர ப.க. தலைவர் கோவி.அழகிரி, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் தங்க .வீரமணி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் மன்னார்குடி ரெத்தினவேலு, கழகப் பொதுக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மன்னை நகரச்செயலாளர் கோ.காமராஜ், நீடாமங்கலம் நகரச் செயலாளர் கி.ராஜேந்திரன், கருவாக் குறிச்சி பா.கோபாலகிருஷ்ணன், மாணவர் கழக மாவட்ட செயலாளர் ச.சாருகான், கவிஞர் கோ.செல்வம், மகாதேவபட்டினம் எம்.எஸ்.சேகர், மேலத்திருப்பலக்குடி ஜி.அருளரசன், மேலதிருப்பலக்குடி மா.கோவிந்தராஜ், மேலவாசல் குணசேகரன், சித்தமல்லி கதிரவன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.பி.குமார், மன்னார்குடி எஸ்.கோபாலகிருஷ்ணன், இளைஞரணி மேனாள் மாவட்ட தலைவர் கோரா.வீரத்தமிழன், பூவனூர் சந்திரசேகர், வடுவூர் து.லோகநாதன் நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் தங்க.பிச்சைக்கண்ணு, புள்ளவராயன் குடிக்காடு து.கலிய மூர்த்தி, மாணவர் கழகத் தோழர்கள் அய்யம்பேட்டை கிரிதரன், முன்னாவல்கோட்டை சி.பாலாஜி அய்யம்பேட்டை பா.சுதன்பாரதி, ஆதனூர் சி.கோகுல் சிக்கப்பட்டு ச.இராஜராஜன், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரெ. இளவரசன், மன்னை ராஜீவ்காந்தி, நல்லிக்கோட்டை சா.நல்லதம்பி, இளைஞரணி நீடா ஒன்றியத்தலைவர் கோயில்வெண்ணி. க.சந்திரசேகர், சோத்திரை .எஸ்.தீபக் ர.கிள்ளிவளவன், பகுத்தறிவாளக் கழகத் தோழர் ரெ.ஆறுமுகம், ப.க.மாவட்ட அமைப்பாளர் இரா.கோபால், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வை.கவுதமன், மன்னார்குடி பா.இந்திரஜித், மன்னார்குடி வே.அழகேசன், மன்னை நகர இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன், திருவாரூர் பா .பாலசுப்பிரமணியன், ராயபுரம் மதி.ரவி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், மன்னை ஒன்றியத்தலைவர் மு.தமிழ்செல்வன், மன்னை நகர கழக தலைவர் எஸ்.என்.உத்திராபதி, நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சதா.அய்யப்பன், நீடாமங்கலம்ஒன்றிய ப.க.செயலாளர் க.முரளி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைஆற்றினார்கள்.
கிராமங்கள்தோறும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

Leave a Comment