கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனின் பெற்றோர் சுயமரியாதைச் சுடரொளிகள் சாக்கோட்டை கணபதி-ஏகாம்பாள் ஆகியோரது 39ஆவது நினைவு நாளையொட்டி உயர் கல்விதுறை அமைச்சர் கோவி. செழியன், மயிலாடுதுறை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், குடந்தை மாநகர துணை மேயர் சுப. தமிழழகன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக, திராவிடர் கழக மாவட்ட, மாநகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் அவர்களது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள். குடும்பத்தாரின் சார்பில் சாக்கோட்டையில் கட்டப்பட்டிருந்த சுயமரியாதைச் சுடரொளிகள் “மானமிகு சாக்கோட்டை கணபதி – ஏகாம்பாள் நினைவுப் பேருந்து பயணிகள் நிழற்குடை”யை குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குடந்தை மாநகர முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.