சென்னை, மார்ச் 12 இந்த ஆண்டு கோதுமை உற்பத்தி 2 சதவீதம் அதிகரித்த போதும் தமிழ்நாட்டு உணவுப் பங்கீட்டுக் கடைகளுக்கு கோதுமை ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. குறுவைப் பருவத்தில் இந்த ஆண்டு கோதுமை உற்பத்தி 1,154 லட்சம் டன் விளைவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1,132 லட்சம் டன்னாக இருந்தது.
இன்னும் 2 ஆண்டுகளில்
செயற்கை நுண்ணறிவுத் துறையில்
23 லட்சம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்
புதுடில்லி, மார்ச் 12 வரும் 2027-ஆம் ஆண் டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சாய்கட் கூறுகையில், “பன்னாட்டு ஏஅய் திறன் மய்யமாக நிலைநிறுத்திக்கொள்ளும் தனித்துவமான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2027-க்குள் ஏஅய் துறையில் வேலைவாய்ப்பு 1.5-2 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஏஅய் துறையில் திறன்மிகு பணி யாளர்களுக்கான தேவை 23 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 10 லட்சம் பேருக்கு வளர்ந்து வரும் தொழில் நுட்பத்துக்கு ஏற்ப புதிய திறன்களை கற்றுக் கொள் வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஏஅய் துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. எனினும், இது தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல.
ஏ.அய். தொழில் நுட்பம்
பன்னாட்டு அளவில் கடந்த 2019-லிருந்து ஆண்டுதோறும் ஏஅய் தொடர்பான வேலைவாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன் வேகத்துக்கு ஏற்ப திறன்வாய்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காததால் இந்த துறையில் இடைவெளி அதிகரித்து வருகிறது. அத்துடன் இது, உலகளவில் ஏஅய் தொழில்நுட்பத்துக்கு மாறும் வேகத்தை குறைக்க காரணமாக மாறியுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்தி ரேலியா போன்ற நாடுகளில் ஏஅய் பணியாளர் களுக்கான தேவை அதிகமாக உள்ளது” என்றார்.