11.3.2025
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
*கனடாவின் பிரதமராக நியமிக்கப்பட்ட மார்க் கார்னி, இந்தியாவுடன் தொழில் வர்த்தக உறவை மீண்டும் புதுப்பிக்க விருப்பம்.
*கல்வி நிதி தர மறுப்பதை எதிர்த்து மக்களவையில் காரசார விவாதம்: தமிழர்களை இழிவுபடுத்திய ஒன்றிய அமைச்சர்: திமுக எம்பிக்களின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தார் தர்மேந்திர பிரதான்
*ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஹோலியின் போது முஸ்லிம்கள் வீட்டுக்குள் ளேயே இருக்க வேண்டும் என பீகார் பாஜக எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு; பாஜகவின் ‘வகுப்புவாத அரசியல்’ என தேஜஸ்வி யாதவ் சாடல்.
* வாக்காளர் பட்டியல் முறைகேடு பற்றி விவாதிக்க அனுமதி மறுப்பு மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு: பொறுப்பற்ற நடத்தை என நட்டா விமர்சனம்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வைக்கம் கோயில் ஜாதி அடிப்படையிலான சடங்கு பிரிவினை முடிவுக்கு வந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வடக்கும்புரத்துப் பட்டு சடங்கிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்த மக்கள். அனைவரும் கோவிலை சுற்றி நடக்கலாம் என நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார் தலைமையில் வெற்றி பெற்ற வைக்கத்தில் மேலும் ஒரு சிறப்பு.
தி இந்து:
* பீகாரில் இளைஞர் வாக்காளர்கள் மீது கவனம் செலுத்த, காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயணம் நடத்த திட்டம்.
* தேசிய கல்விக் கொள்கை ஏன் நிராகரிக்கப்பட வேண்டும்? புதிய வலைதளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது பொதுப் பள்ளி முறைக்கான மாநில தளம் – தமிழ்நாடு (SPCSS-TN)
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர்’ இந்திய பிரதமர் நரேந்திர மோடி, என்று சொல்கிறார் ராஜஸ்தான் பாஜக ஆட்சியின் முதலமைச்சர் பஜன்லால் சர்மா. ஆம், மோடி சிறந்த நடிகர் தான்; இதைத் தான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோமே என காங்கிரஸ் பதிலடி.
.- குடந்தை கருணா