சென்னை, மார்ச் 11 தமிழ்நாட்டில் கடந்த 2023-2024-ஆம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகாவாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.
காற்றாலை, சூரிய சக்தி நிறுவு திறன் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2019-2020-ல் இருந்து 2022-2023 வரை பல பிரிவுகளிலும் நிறுவு திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, காற்றாலை நிறுவு திறன் 55 மெகாவாட்டில் இருந்து 124 மெகாவாட்டாகவும், மேற்கூரை சூரிய சக்தி திறன் 44 மெகாவாட் டில் இருந்து 101 மெகாவாட் டாகவும் அதிகரித் துள்ளது. 1,276 மெகாவாட்டாக இருந்த சூரியசக்தி நிறுவு திறன் 1,192 மெகாவாட்டாக உள்ளது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகாவாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.