திருவாரூர், மார்ச் 9- திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 6.3.2025 அன்று மாலை 5 மணி அளவில் திருவாரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நகர தலைவர் கா.சிவராமன் வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட காப்பாளர் வீர.கோவிந்தராஜ் ஆகியோர முன்னிலையில் வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சிதம்பரம் பொதுக்குழு கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரையில் தெரிவித்த திட்டங்களை செயல்படுத்த வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டும் ஆசிரியர் அவர்களின் திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு பெரும் நிதி திரட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார். விடுதலை சந்தாவை ஒன்றியங்கள் தோறும் புதிதாக சேர்த்து கொடுக்குமாறு கூறினார்.
ஒன்றிய நகரத்தில் பரப்புரைக் கூட்டங்கள் எங்கு பார்த்தாலும் நடை பெற வேண்டும் என்றும் உரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி தமது உரையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நகரங்களில் இளைஞரணித் தோழர்களைக் கொண்டு கல்லூரிகளில் வாயில் கூட்டம் நடத்துவதை பற்றி வலியுறுத்தி உரையாற்றினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மேனாள் காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா, திருவாரூர் மேனாள் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.மணியம் அவர்களின் மகன் எஸ்.எஸ்.எம்.கிருஷ்ணமூர்த்தி, கண்கொடுத்த வணிதம் ஒளிசங்கோ (எ) நடராஜன், வேம்பநைனார் கோவில் இரா.புகழேந்தி, திருமஞ்சோலை என்.வைரக்கண்ணு, பருத்தியூர் பட்டம்மாள், திருவாரூர் ஒன்றிய மேனாள் செயலாளர் தங்கராசு, வைப்பூர் பக்கிரிசாமி, குடவாசல் உத்திராபதி, புதுக்குடி கு.சீனிவாசன், மேல உத்திரக்குடி சாமிதாஸ், திருத்துறைப்பூண்டி பன்னத் தெரு அஞ்சம்மாள், ஏற்காட்டூர் சுடர்மணி, ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் இக்கூட்டம் தெரிவிக்கிறது.
15.2.2025 சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு திருவாரூர் மாவட்டத்தில் சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி உயர பெரியார் உலகத்திற்கு திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் நிதி வசூல் செய்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் கிராமங்கள் முதல் பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழகப் பிரச்சார கூட்டங்களை பரவலாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு பண்பாட்டு பாதுகாப்பு பரப்பரை பயணத்தை திருவாரூர் மாவட்டம் சார்பாக திருத்துறைப்பூண்டியில் மிகுந்த எழுச்சியோடு நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
புதிய பொறுப்பாளர்கள்
திருவாரூர் ஒன்றிய செயலாளராக செ.பாஸ்கர்
முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் ரெ.கருணாநிதி
முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் பொன்.செல்வராசு
இளைஞரணி பொறுப்பாளர்கள்
மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ
மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.மதன்
திருவாரூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் க..அறிவிச்செல்வன்
குடவாசல் ஒன்றிய இளைஞரணி தலைவர் சி ரவிக்குமார்
திருத்துறைப்பூண்டி நகர இளைஞரணி தலைவர் ஆ.சந்தோஷ்
பங்கேற்றோர்
மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட காப்பாளர் வீர.கோவிந்தராசு, மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர் கி. அருண் காந்தி மாவட்டத் துணைச் செயலாளர் ம. மனோஜ், மாவட்ட விவசாய செயலாளர் க.வீரையன் மாவட்ட ப.க. தலைவர் ரெ.ஈவேரா, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் இரா.நேரு, கழக பேச்சாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, நாகை மாவட்ட மகளிரணி செயலாளர் த.ஜெயப்பிரியா, மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, செயலாளர் மு.மதன், திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர் சு சித்தார்த்தன், ஒன்றிய தலைவர் ச.பொன்முடி செயலாளர் இரா.அறிவழகன், நகர தலைவர் சு.சித்தார்த்தன், நகர துணை செயலாளர ப.சம்பத்குமார் ஆ.சந்தோஷ், முத்துப்பேட்டை ரெ கருணாநிதி, பொன்.செல்வராசு, நன்னிலம் ஒன்றிய ப.க தலைவர் எஸ் கரிகாலன், ஒன்றிய தலைவர் இரா.தன்ராஜ், செயலாளர் சு.ஆறுமுகம், வை ராமசாமி, திருவாரூர் ஒன்றிய தலைவர் க.கவுதமன், அமைப்பாளர் ஜெ.கனகராஜ், ஒன்றிய இளைஞரணித் தலைவர் செ.பாஸ்கரன், திருவாதிரைமங்கலம் பெ.கோவிந்தசாமி, டீ.ஞானசேகரன், திருவாரூர் நகர தலைவர் கா.சிவராமன் செயலாளரர் ப.ஆறுமுகம், திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி திருவாரூர் தலைவர் வே.அறிவழகன், திருப்பள்ளி முக்கூடல் கார்த்திக், பிரபு, கா.சி ராஜா, கே.ரமேஷ், மஞ்சக்குடி செ.ரவிக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் புதிய பொறுப்பாளர்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்தார். இறுதியாக நகர செயலாளர் ப.ஆறுமுகம் நன்றி கூறினார்.