பகுத்தறிவு ஒன்றே மனிதரின் சிறப்புக்குச் சான்று

2 Min Read

“அறிவு என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. தாவரங்கள், பட்சிகள், மிருகங்கள் முதல் மனித சமுதாயம் வரை அறிவு என்பது பொதுவாக உள்ளது. ஆனால், இந்த அறிவானது அதனதற்கு வேண்டிய வாழ்க்கையை காப்பாற்ற மட்டும் வேண்டிய அளவு இயற்கையால் உண்டாக்கப்பட்டிருக்கிறது.

மனிதன் தன்னைக் காப்பாற்ற மட்டும் போதிய அறிவை அடைந்து, அதற்கும் மேற்பட்ட அறிவையும் அடைந்திருக் கிறான். அப்படி அதிகமாக அடைந்துள்ள அறிவு தான் பகுத்தறிவு என்று சொல்லப்படுகிறது. மேன் மேலும் எதையும் ஆராய்ந்து அதன் பயனாக விஞ்ஞானத் துறையில் தன் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள முடிகிறது. பண்டைய காலத்தில் காட்டுமிராண்டிகளாகவும், நாகரிகமற்றவர்களாகவும் வாழ்ந்த மக்கள் இன்றைய தினம் மின்சார சாதனங்களையும், வைத்திய சாதனங்களையும் மற்றும் பலவிதங்களிலும் பயன் படுத்திக் கொண்டு மேன்மேலும் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே வருகிறார்கள்.

ஆனால், மனித சமுதாயமல்லாத மற்ற மிருகங்கள் போன்ற ஜீவராசிகள் அப்பொழுது எப்படி வாழ்ந்தனவோ, அதேபோல் தான் இப்பொழுதும் வாழ்ந்து வருகின்றன. இதுதான் மனிதனுக்கும், மற்ற ஜீவனுக்கும் உள்ள வித்தியாசம்.

இதன்றி எவனொருவன் பண்டைக் காலத்தில் உள்ள வாழ்க் கையையே மேற்கொண்டு கால மாறுதலுக்கு ஏற்றாற் போல் தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவில்லையோ, அவனுக்கும் மற்ற மிருக ஜாதிகளுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. தொன்றுதொட்டுக் கையாண்டு வருவதையும் இதுதான் என்னுடைய மதத்தின் வழக்கம். சாஸ்திரத்தின் விதி என்று அநாகரிக ஆபாசங்களைக் கடைபிடிப்பவனையுமே பகுத்தறிவு இல்லா ஜீவனுக்கு ஒப்பிடலாம். ஆகவே, பகுத்தறிவின் மேன்மை தெரிந்தவன் இதைப் புறக்கணிக்க மாட்டான்.

ஆனால், இந்நாட்டில் பகுத்தறிவுக்கு இடமளிக்காதவர்களும் எதையும் அறிவினால் ஆராயக் கூடாது என்று கூறுகிறவர்களும் பார்ப்பனர்கள்தான். அவர்கள் கூறுகிறவற்றையே நம்ப வேண்டும். அவற்றின் பித்தலாட்டங்களைக் கண்டித்துக் கேட்கக் கூடாது என்றும், உண்மையறிந்து அதன் வழியில் நடக்கக் கூடாது என்றும் கூறுகிறவர்கள் பார்ப்பனர்கள் தான். காரணம், அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே உண்மையை மறைத்து, பொய், பித்தலாட்டங்களுடன் வாழ்ந்தவர்கள். இன்றைய தினம் உண்மையை எடுத்துரைத்தால் அதனால் அவர்கள் வாழ்வதற்கே வழி இன்றிப் போய்விடுகிறது. உண்மையைக் கூறி வாழ முடியாதவர்கள் நேர்மையான முறையில் எதையும் செய்ய முடியாத ஏமாற்றுக்காரர்கள் இவர்களே அயோக்கியர்களின் பட்டியலில் அங்கத்தினர்களாக உள்ளவர்கள். இப்படிப்பட்டவர்கள் இருப்பதால் தான் நம்மக்கள் பகுத்தறிவுக்குப்போதிய சுதந்திரம் கொடுக்க முடியாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியாமையில் மூழ்கி பார்ப்பனர்களின் அடிமைகளாகவே வாழ்கின்றனர். எனவே தான், என்றைக்கு பார்ப்பனர்கள் இந்நாட்டை விட்டு அகற்றப்படுகிறார்களோ, அன்றுதான் நம் மக்கள் சுதந்திரமுடையவர்களாக ஆக முடியும்.
திருப்பத்தூர் (வ.ஆ) பகுத்தறிவு மன்றத்தின் சார்பாக

9.2.1955 ‘நியூ’ சினிமா கொட்டகையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை
(“விடுதலை” 14.2.1955

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *