6.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* தற்போது உள்ள தொகுதிகள் எண்ணிக்கை மேலும் 30 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்; தொகுதி சீரமைப்பால் ஏற்படும் பாதிப்புக்கு எதிராக போராட தென் மாநில எம்பிக்கள் அடங்கிய கூட்டுக் குழு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்.
நீதிபதிகள் நியமனம்: எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, பெண்கள் பிரதிநிதித்துவம் வேண்டும், சென்னை வழக்குரைஞர்கள் சங்கம் கோரிக்கை.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி பொருள்களுக்கு ஏப்ரல் 2 முதல் 100 சதவீதத்திற்கு மேல் வரி, டிரம்ப் உத்தரவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
பீகார் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளர்; மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
‘சண்டிகர் சலோ‘: டிராக்டர்-டிராலிகள் மற்றும் பிற வாகனங்களில் சண்டிகருக்கு புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப் காவல்துறையினரால் பல இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் செங்கோலை (தமிழ்நாட்டின் செங்கோல்) நிறுவுவதற்கு பதிலாக, மாநிலத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலிருந்து பிரதமர் ஹிந்தி மொழியை நீக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
தி இந்து
சுதந்திரத்திற்காக சாவர்க்கர் பாடுபட்ட ஒரு நிகழ்வை நீங்கள் காண முடியாது, என அருண் ஷோரி, தான் எழுதிய புதிய புத்தகமான ”புதிய அவதாரம்: சாவர்க்கர் குறித்து உண்மைகள்” எனும் ஆங்கில நூல் குறித்து அளித்த பேட்டியில் கூறினார்.
தி டெலிகிராப்
‘அமிர்த காலம்’ தலித்துகளையும், சிறுபான்மை யினரையும் ஒதுக்கி வைக்கிறது’. சிறுபான்மையினரின் மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டு கேலி செய்யப்படுகின்றன என ஆசாத் சமாஜ் கட்சித் தலைவரும் மோடி அரசு மீது குற்றச்சாட்டு.
விலைவாசி உயர்வால், பெண்கள் தங்கள் நகைகள் மீது கடன் வாங்கும் நிலை அதிகரித்துள்ளது, மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா
பொது சிவில் பணிகளில் முஸ்லிம் ஒப்பந்ததாரர்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை கருநாடக அரசு மீண்டும் அறிமுகப்படுத்த திட்டம்.
.- குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment