கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் சாயிராம் (பர்னிச்சர்) அகப் பொருளகம் அங்காடி மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் திறந்தார்

Viduthalai
1 Min Read

கிருட்டினகிரி, மார்ச் 6- கிருட் டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யத்தில் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் நாராயணமூர்த்தியின் சாயிராம் (பர்னிச்சர்) அகப் பொருளகம் அங்காடி மற்றும் விரிவுப் படுத்தப்பட்ட இருப்பு அங்காடி ஆகியவை திறப்பு விழா நிகழ்ச்சி 2/03/2025 அன்று காலை 10.30 மணியளவில் வெ. நாராயணமூர்த்தியின் விரிவுப் படுத்தப்பட்ட சாயிராம் (பர்னிச்சர்) அகப் பொருளகம் அங்காடியை கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன்- சாயிராம் அங்காடியை திறந்து வைத்தார்.
விரிவுப்படுத்தப்பட்ட இருப்பு அங்காடியை பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, துணைச் செயலாளர்கள் சி.சீனிவாசன், சீனிமுத்து. இராசேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முருகேசன், இல. ஆறுமுகம், மேனாள் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட ப.க.தலைவர்
ச. கிருட்டினன், மாவட்ட ப.க.துணைச்செயலாளர் மா.சிவசங்கர், மாவட்ட ப.க. துணைத் தலைவர் அ.வெங்கடாசலம், மாவட்ட தொழிலாளரணி நிர்வாகி செ.ப.மூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் நா. சிலம் பரசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, துணைச் செயலாளர்
பூ.இராசேந்திரபாபு, ஒன்றியத் தலைவர்கள் த.மாது, அண்ணா அப்பாசாமி, பெ.செல்வம், நகரச் செயலாளர் அ.கோ.இராசா, ஒன்றியச் செயலாளர் கி.வேலன், மத்தூர் சா.தனஞ்செயன், உண்ணாமலை, காவேரிப்பட்டணம் ஆ.ஆர்த்தி, ஆ.மணிக் கொடி, எம்.இரஞ்சித் உள்ளிட்ட கழகப் பொறுப் பாளர்களும் தோழர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
விடுதலை வாசகர் வட்டத் தலைவரும் சாயிராம் (பர்னிச்சர்) அகப் பொருளக அங்காடி உரிமையாளருமான வெ.நாராயணமூர்த்தி அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு மதியம் அனைவருக்கும் சுவையான பிரியாணி விருந்து வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *