கோடநாடு வழக்கை விரைவாக விசாரணை நடத்திடுக!

Viduthalai
3 Min Read

தமிழ்நாடு முழுதும் ஆகஸ்ட் முதல் தேதி ஆர்ப்பாட்டம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 12– கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரிக்கக் கோரி தமிழ் நாடு முழுவதும் 1ஆம் தேதி ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள் ளார்.

மேனாள் முதலமைச்சர் ஓ.பன் னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜெயலலிதா நேசித்த வசிப்பிட மாகவும் இருந்து வந்தது கோட நாடு பண்ணை வீடு. அவரது மறை விற்கு பிறகு 2017, ஏப்ரல் 24-ஆம் நாளன்று ஒரு கூட்டம், அந்த கோடநாடு தோட்டத்திற்குள் புகுந்து அங்கே காவல் காத்து வந்த ஓம்பகதூர் என்கிற காவலாளியை கொலை செய்து, கிருஷ்ண பகதூர் என்னும் காவ லாளியை கொடுங் காயப்படுத்தி, கொலை, மோசமான கொள்ளையை நிகழ்த்திய சம்பவம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இந்த சம்ப வத்தை திட்டமிட்டு அரங் கேற்றியதாக சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் மேனாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் கோட நாடு பங்களாவில் சி.சி.டி.வி. மற் றும் கணினி உள்ளிட்ட பொறுப்புகளை நிர்வகித்து வந்த தினேஷ் என்கிற இளைஞர், இந்தக் கொள் ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களை ஏற் பாடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சயான் என்பவரது மனைவி, மகள், மேலும் இந்தக் குற்றம் நிகழ்ந்த காலத்தில் கோடநாடு சரக காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் உள்ளிட்ட பலரது சந்தேக மரணங்கள், திடீர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று, மொத்த மாக 6 உயிர் கள் பறி போய்விட்டது.

இந்தக் கொடூரங்கள் நடை பெற்று ஏறத்தாழ 6 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட்டு தண்டிக்கப் படவும் இல்லை.

இந்தக் குற்றத்திற்கான நோக் கம், இந்த காரியத்தை பின் இருந்து இயக்கி யவர்கள் யார் என்பதையெல்லாம் கண்டறிவதற்கும்,  அவர்களை  கடுமை யாக தண்டிப்ப தற்கும் முறையான நடவடிக்கைகள் இதுவரை உறுதியோடு மேற்கொள் ளப்படாமல் கிடப்பில் போடப் பட்டதாகவே கருதப்படுகிறது.

விசாரணை மாடங்களும், விசா ரிக்கப்படும் அமைப்புகளும் மாறு கிறதே தவிர, இந்த வழக்கின் சூத்திரதாரி யார் என்பதும், இந்தக் குற்றத்தை முன்னின்று நடத்திய கொடூரன் யார் என்கிற முடிச்சும் இன்று வரை அவிழ்க்கப்பட வில்லை.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பல உயிர்கள் பறிபோன நிலையிலும், அந்தக் கொடூர நிகழ் வில் உயிரோடு தப்பித்து நேபாளத்திற்குச் சென்ற கிருஷ்ணபகதூர் என்கிற காவலாளியை இன்று வரை அழைத்து வந்து, அவர் கண் ணால் கண்ட அச்சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை ஏதும் காவல் துறையால் நடத்தப்படாமல் இருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரி யத்தையும் அளிக்கிறது. தி.மு.க.வின் மீது கடுமை யான கோபத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக் கப்பட வேண்டும். கொலையையும், கொள்ளையையும் நடத்தியவர்கள் சட் டம்- ஒழுங்குக்கும், தமிழ்நாடு காவல் துறையின் மாண்புக்கும் சவால் விடுத் திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். 

கொடநாடு கொலை, கொள்ளை குறித்து ஆளும் தி.மு.க. அரசு கூடுதல் கவன மும், அதி முக்கியத்துவமும் கொடுக்காமல் இருப்பதைக் கண்டித் தும், இந்த வழக்கினை விரைந்து விசாரித்து குற்ற வாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய அளவில், அனைத்து வருவாய் மாவட்டங் களிலும் ஆகஸ்டு 1-ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப் பாட்டம் நடை பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *