சென்னை, ஜூலை 12 – ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்” – அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.
அவர் அறிக்கை வருமாறு:
“கோயில்களில் சமூக நீதியை நிலைநாட்டவும், சேவையில் அனைவருக்கும் சம வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை நிறைவேற்றிடும் வகை யிலும், உரிய பயிற்சிகள் வழங்கிடவும் மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவண்ணா மலை, அருணாசலேசுவரர் கோயில், சிறீரங்கம், அரங்கநாத சுவாமி கோயில், திருவல்லிக்கேணி, பார்த்த சாரதி சுவாமி கோயில், சிறீபெரும்புதூர், ஆதிகேசவ பெருமாள் மற் றும் பாஷ்யகார சுவாமி கோயில் ஆகிய கோயில்கள் சார்பில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திரு வண்ணாமலை, அருணாசலேசுவ ரர் கோயில், சமயபுரம், மாரியம்மன் கோயில் சார் பில் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளும், சிறீவில்லிப் புத்தூர், நாச்சியார் (ஆண்டாள்) கோயில் சார்பில் பிரபந்த விண்ணப்பர் பயிற்சி பள்ளியும், பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் நாகநாதசுவாமி கோயில் சார்பில் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகள் பகுதி நேரம் மற்றும் முழு நேர பயிற்சிப் பள்ளி களும், பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில், மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயில் மற்றும் திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களின் சார்பில் வேத ஆகம பாடசாலைகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சியும், ஊக்கத் தொகை யாக மாதம் ஒன்றுக்கு ரூ.3,000/- மற்றும் பகுதி நேரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்க தொகை ரூ. 1500/- வழங்கப்படுகிறது.
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 24 வயதுக்குள்ளும், ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 20 வயதுக்குள்ளும், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 16 வயதுக் குள்ளும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேத ஆகம பாடசாலையில் சேர வயது வரம்பு 12 முதல் 16 வயதுக்குள்ளும் மற்றும் பிரபந்த விண்ணப்பர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 8 முதல் 18 வயதுக்குள் இருப்பதோடு 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
மாணவர் சேர்க்கைக்கான படி வங்களை அந் தந்த கோயில்களின் அலுவலகத்தில் அலுவலக வேலை நேரத்தில் நேரிலோ அல்லது அந்தந்த கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு° <https://hrce.tn.gov.in> என்ற துறையின் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இப்பயிற்சிப் பள்ளிகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிக்கையில் கூறியுள்ளார்.