மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கிலும் மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவணப் பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக அனைத்து பதிவு அலுவலகங்களும் காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.