சென்னை, ஜூலை 12 – முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள “பகுத்தறிவு, சீர்திருத்தச் செம்மல் கலைஞர்”என்ற குழுவின் முதல் கூட்டம் நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடைபெற்றது.
அதன் விவரம் வரு மாறு:-
தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை தேர்த லில் 13 முறை போட்டி யிட்டு அனைத்து முறை யும் வெற்றி பெற்றவரும், 5 முறை தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக இருந்தவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு அன்னா ரது புகழ் நிலைத்திடும் வகையிலும் அவர் தமிழ் நாட்டு மக்களின் நலனிற் காக அறிவித்து, நிறை வேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும் பொது மக் கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையிலும் அரசு சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடிட முடிவு செய்யப்பட்டு இதற் கென பல்வேறு தலைப்பு களில் குழுக்கள் அமைத்து ஆணையிடப்பட்டது.
அதில் “பகுத்தறிவு சீர்திருத்தச் செம்மல் கலைஞர்” என்ற குழு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்க ளைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட் டுள்ளது.
நேற்று (11.7.2023) தலைமைச் செயலகத்தில் இக்குழுவின் முதல் கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இக்குழு வின் இணைத் தலைவர் களாக வீட்டு வசதி மற் றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத் துச்சாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங் கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் நீர்வள த்துறை கூடுதல் தலைமைச் செயலாளரும், முனைவர். சந்தீப் சக் சேனா மற்றும் இக்குழு உறுப்பினர்களான திருமதி.ஏ.எஸ்.குமரி, சுந்தரஆவுடையப்பன், வே.மதிமாறன், வாலாசா வல்லவன், சூர்யாசேவி யர், செந்தலை கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புற நடத்துவது குறித்தும், கருத்தரங்கங்கள் நடத்துவது குறித்தும் விழா மலர் வெளியிடுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.