இராஜபாளையம் கழக மாவட்டம் முரம்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து பொதிகை விரைவு வண்டி மூலம் இராஜபாளையம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்டத் தலைவர் இல. திருப்பதி தலைமையில் மாவட்ட செயலாளர் கோவிந்தன், மாவட்டத் துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் பாண்டி முருகன், மாவட்ட ப.க செயலாளர் பெத்தையா, மாவட்ட ப.க அமைப்பாளர் முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் பறையிசை முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ஈஸ்வரன், திமுக ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் இம்மானுவேல் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும், இளைஞர்களும் திரளாக வந்து வரவேற்று மகிழ்ந்தனர். (26.2.2025)
இராஜபாளையம் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு

Leave a Comment