மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் விடுவிப்பு கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை தற்கொலை
போபால், ஜூலை 12 – மத்தியப் பிரதேசத்தில் விதிஷா நகரில் வசித்து வந்த ஒரு இளம்பெண் 6 பேருக்கு எதிராக பாலி யல் துன்புறுத்தல் குற்றச் சாட்டு கூறினார். இதனால் அந்தப்பெண் கொலை செய்யப்பட்டார், ஆனால் காவல்துறை தற்கொலை என்று பதிவு செய்து உள்ளது.
இதனை தொடர்ந்து, நதேரன் காவல் நிலை யத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சுதீப் தகத் என்ற நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந் நிலையில், இளம்பெண் ணின் தந்தை தற்கொலை செய்து உள்ளார். இத னால், அவரை தற் கொலைக்கு தூண்டினர் என 6 பேருக்கு எதிராக விதிஷா கொத்வாலி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள் ளது.
இதுபற்றி மத்தியப் பிரதேச உள்துறை அமைச் சர் நரோட்டம் மிஷ்ரா விசாரணைக்கு உத்தர விட்டார். அவர் கூறும் போது, இளம்பெண் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததும் வழக்கு ஒன்று பதிவானது. அந்த இளம்பெண் தற்கொலை செய்ததும், தற்கொலைக்கு தூண்டிய வழக்கு ஒன் றும் பதிவு செய்யப்பட் டது. குற்றவாளி சுதீப் தகத் கைது செய்யப்பட் டார் என கூறியுள்ளார். சிறையில் இருந்து சுதீப் தகத் விடுதலையான நிலை யில், இளம்பெண்ணின் தந்தை தற்கொலை செய்து உள்ளார் என அமைச்சர் மிஷ்ரா கூறி யுள்ளார். இதனையடுத்து, 2 பேர் கைது செய்யப் பட்டு உள்ளனர். நத்தே ரன் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி மற் றும் தலைமைக் காலவர் ஆகியோர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பாலியல்வன்கொடுமை செய்த குற்றவாளி சுதிப் தகத் முக்கிய அரசியல் பிரமுகரின் பாதுகாப்பில் இருந்துள்ளார். அந்த அரசியல் பிரபலத்தின் அழுத்தம் காரணமாக சுதிப் தகத் மீது மிகவும் சாதாரணமான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இதனால் அவர் எளிதில் வழக்கிலிருந்து விடுவிக் கப்பட்டார். இந்த நிலை யில் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்று தனது மற்றும் தனது நன்பர்கள் மீது போடப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப்பெறுமாறு மிரட்டியுள்ளார்.
காவல்துறை மற்றும் நீதித்துறை இரண்டுமே தன்னுடைய மகளின் மரணத்திற்கு காரண மான குற்றவாளிகளை ஒன்றுமே செய்யாமல் விட்டுவிட்டதே என்று வேதனையில் பெண் ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இவ்வளவு நடந்த பிறகும் கூட குற்றவாளிமீது எந்த வழக்கும் பதிவு செய்யா மல் காவல்துறை அமைதி காத்து வருகிறது.