தூத்துக்குடியில் கழகத்தின் சார்பில் ஹிந்தி திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிஜேபியினர் வீண் வம்பு புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

1 Min Read

23ஆம் தேதி மாலை அய்ந்து மணிக்கு தூத்துக்குடியில் ஒன்றிய பிஜேபி அரசின் ஹிந்தி சமஸ்கிருதத் திணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கழக காப்பாளர் மா.பால்இராசேந்திரம் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள்
மோ.அன்பழகன் தி.மு.க., மாடசாமி இந்திய கம்யூனிஸ்ட், சேமா.சந்தனராஜ் தமிழர் விடியல் கட்சி, சி.சுஜித் புரட்சிகர இளைஞர் முன்னணி, செல்வகுமார் மக்கள் அதிகாரம், அ.பிரசாத் தந்தை பெரியார் தி.க., அசன் மனித நேய ஜனநாயக கட்சி, திராவிடர் கழகத் தோழர்கள் இரா.ஆழ்வார், ச.வெங்கட்ராமன், த.செல்வராஜ், மு.பாலமுருகன், த.நாகராஜன், சி.மணிமொழியன், சொ.பொன்ராஜ், சு.திருமலைக்குமரேசன், ச.சக்திவேல், கி.கலைச்செல்வன், க.குமரேசன், சி.மோகன்தாஸ், இராமசெல்வேந்திரன், தி.இல.கார்த்திகேயன், ராபின், க.மாரியப்பன், செ.செல்லத்துரை, பொ.போஸ், நம்பிபாண்டின், கோ.முருகன், வழக்கறிஞர் பால்பிரபாகரன்ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
முதலாவதாக திமுக இலக்கிய அணியை சேர்ந்த மோ.அன்பழகன் பேசத் தொடங்கினார் அப்போது எதிரில் இருந்த தேனீர் கடையிலிருந்து பிஜேபியினர் 25பேர்மோடியை பேசாதே என்று இழிவான வார்த்தை கூறி கூட்டத்தின் அருகில் வந்து பேசவிடாமல் தகராறு செய்தனர்.

தோழர்கள்ஒன்றுசேர்ந்து அவர்களை அப்புறப்படுத்த முனைந்தவுடன் சாலைகடந்து தேனீர் கடையில் நின்று கொண்டனர் .
முறையாக காவல்துறையில் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம்நடைபெற்ற இடத்திற்கு காவல்துறையினர் யாரும் வராததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றோர் சாலைமறியலில் ஈடுபட்டனர் பின்னரே காவல்துறையினர் இரண்டு வாகனத்தில் வந்தனர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடர்ந்து காவல் நிலையத்திற்கு பிஜேபியி னரை கைதுசெய்ய வலியுறுத்தி காப்பாளர் மா.பால் இராசேந்திரம் புகார் அளித்தார்.
தூத்துக்குடியில் காவல்துறையினரின் பா.ஜ.க சிந்தனை போக்கின் காரணமாகவே கலவரச்சூழல் உருவாகி கொண்டிருக்கிறது.
புகார் கொடுக்கப்பட்டுள்ளது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று பார்ப்போம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *