தஞ்சை, பிப். 24- தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் 21.2.2025 அன்று மாலை 6:00 மணி அளவில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகரச் செயலாளர் செ.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை உரையாற்றினார். காப்பாளர் மு.அய்யனார், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன் பொதுக்குழு உறுப்பினர்கள் வ.ஸ்டாலின்மற்றும் தீ.வ.ஞான சிகாமணி மாவட்ட துணைச்செயலாளர் ரெ.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை உரையாற்றினர். இந்த கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தினை மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் எடுத்துரைத்தது கருத்துரை வழங்கினார்.
திருவையாறு ஒன்றியத் தலைவர் கண்ணன்,திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை. ஸ்டாலின், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்ரமணியன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு ராமலிங்கம், பூதலூர் ஒன்றிய தலைவர் மா.வீரமணி,பெரியார் பெருந்தொண்டர்கள் வளப்பக்குடி தங்கவேல், அம்மன்பேட்டை எம்.எஸ் கலியபெருமாள், தஞ்சை மாநகர இளைஞரணி செயலாளர் அ. பெரியார் செல்வம், புதிய பேருந்து நிலையம் பகுதி தலைவர் சாமி. கலைச்செல்வம், அம்மாப்பேட்டை நகரத் தலைவர் சுந்தரவடிவேல், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி. ராமதாஸ்,பூதலூர் நகரத் தலைவர் ஜெயசித்ரா சந்தானம், கரந்தை பகுதித் தலைவர் வெ. விஜயன், மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி,மாவட்ட ப.க செயலாளர் பாவலர் பொன்னரசு,திருவையாறு ஒன்றிய இளைஞரணி செயலாளர் க.அன்பழகன்,திருவையாறு நகரத் தலைவர் கவுதமன், திருக்காட்டுப் பள்ளி நகரத் தலைவர் அ.இஸ்மாயில், வடசேரி சரவணன், ஏ.கோவிந்தராஜ், திருவையாறு ஒன்றிய இளைஞரணித் தலைவர் அ.மோகன்ராஜ், திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் மு.விவேகவிரும்பி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே.ராஜவேல், மாநில ப.க. அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாவட்ட ப.க. இணைச் செயலாளர் ஆ.லட்சுமணன், பூதலூர் ஒன்றிய துணைச் செயலாளர் ப.விஜயகுமார், மாவட்ட மகளிரணித் தலைவர் அ.கலைச்செல்வி, மாவட்ட கலை இலக்கிய அணித் தலைவர் சடையார்கோவில் நாராயணசாமி,பூதலூர் ஒன்றிய துணைச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சந்துரு, பிள்ளையார்பட்டி முருகேசன், ஒரத்தநாட்டிற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய துணை செயலாளர் லெனின், மாவட்ட மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி, அண்ணா நகர் பகுதி செயலாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன் ஒரத்தநாடு நகர தலைவர் பேபி ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்நிகழ்வின் இறுதியாக மாநகர இணைச் செயலாளர் இரா வீரக்குமார் நன்றி உரையாற்றினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
இரங்கல் தீர்மானம்: குடந்தை மாவட்ட மேனாள் காப்பாளர் வலங்கை.கோவிந்தன் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
15.02.2025 அன்று சிதம்பரத்தில் நடை பெற்ற திராவிடர் கழக பொது குழு தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துதல் என்று தீர்மானிக் கப்படுகிறது
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடு தலைக்கு தஞ்சை மாவட்டத்தில் முடிவடைந்த சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி உயர பெரியார் சிலை உடன் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தஞ்சை மாவட்டத்தின் சார்பில் பெருமளவில் நிதி வசூல் செய்து வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கிராமம் முதல் பேரூராட்சி நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழகப் பிரச்சாரக் கூட்டங்களை பரவலாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
பெரியார் பேசுகிறார் 100ஆவது நாள் நிகழ்ச்சியை தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மே மாதத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் பட்டியில் நிலா புரமோட்டர்ஸ் அரங்கத்தில் கழக குடும்ப விழா தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு நாள் விழாவாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது .
புதிய பொறுப்பாளர்கள்
தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம்.
மாநகரத் தலைவர்: செ.தமிழ்ச்செல்வன்
மாநகரச் செயலாளர்: இரா.வீரகுமார்
மாநகர துணைத்தலைவர்: ஆ.டேவிட்
மாநகர துணைச்செயலாளர்: இரா. இளவரசன்
பள்ளி அக்ரஹாரம் பகுதி அமைப்பாளர்: பேராசிரியர் ஜோதிபாசு
தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர்: கவிஞர் .பகுத்தறிவு தாசன்
தஞ்சை மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள்:
மாவட்ட இளைஞரணி தலைவர்: ஆ.பிரகாஷ்
மாவட்ட இளைஞரணி செயலாளர்: க.அன்பழகன் அரசூர்
மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்: இரா மணிகண்டன் மணத்திடல்
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்: அண்ணா.மாதவன் ஆயங்குடி ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.