மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (20.2.2025) சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில், 1127 மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிடமாறுதல் ஆணையினை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர். ப.செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் மரு.ராஜமூர்த்தி, கூடுதல் இயக்குநர் மரு.விஜயலட்சுமி, இணை இயக்குநர் மரு.செந்தில்குமார் மற்றும் மருத்துவர்கள், அரசு உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.