சென்னை, பிப் 20 விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணா்கள் வி.புருஷோத்தமன், சபரி கிரீஷ் அம்பாட் ஆகியோா் செய்தியாளா்களிடம் சென்னையில் கூறியதாவது: பணியின்போதோ, பயணத்தின்போதோ, விளையாடும்போதோ விபத்துகள் நேரிடுகையில் சில நேரங்களில் கை விரல்கள் துண்டாகக் கூடும். குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பலா் அத்தகைய பாதிப்புடன் மருத்துவமனையை நாடுகின்றனா். பொதுவாக துண்டான கை விரல்களை 6 மணி நேரத்துக்குள் இணைக்க வேண்டும். குளிா்சாதனக் கட்டமைப்பில், துண்டான விரல்களை பதப்படுத்திக் கொண்டுவரும்போது குறிப்பிட்ட நேரம் கடந்தாலும் அந்தப் பாகங்களை இணைக்க முடியும். இதற்கு மேம்பட்ட நுண் அறுவை சிகிச்சை முறை பயனுள்ளதாக உள்ளது.மிகவும் சிதைந்த நிலையில் கை விரல்கள் இருக்கும்போது அவா்களுக்கு செயற்கை விரல்கள் பரிந்துரைக்கப்படும். அதில், உணா்வு இருக்காது, மடக்கவோ, நீட்டவோ முடியாது. அதேவேளையில் கை விரல் பயன்பாடு வேண்டும் என்றால் அவா்களின் கால்களில் இருந்து ஒரு விரல் எடுத்து, அதைக் கைகளில் பொருத்தும் சிகிச்சை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. அதை நுண் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் சாத்தியமாக்குகின்றனா். சா்க்கரை நோயாளிகளுக்கும், முதியவா்களுக்கும்கூட அந்த நுட்பத்தில் விரல்களை மாற்றி பொருத்த முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள் நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books