அரூர் பிப்ரவரி 19- அரூர் கழக மாவட்ட தோழர்கள், பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் 8-2-2025 ஆம் தேதி மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர் களின் அறிவுறுத்தலின்படி கழக வளர்ச்சிப் பணி, கழக கட்ட மைப்பு, விடுதலை சந்தா, பெரியார் உலகம் போன்றவை குறித்து கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் கூட்டத் தில் பேசினார்
கடத்தூர்
அரூர் கழக மாவட்டம் கடத்தூர் மொரப்பூர் ஒன்றிய அமைப்புகளின் சந்திப்பு கூட்டம் கடத்தூர் தமிழ்ச்செல்வி அச்சகத்தில் ஒன்றிய தலைவர் பெ.சிவலிங்கம் தலைமையில் கழக காப்பாளர் தனசேகரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மு. பிரபாகரன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.சிவக்குமார், நகர கழகத் தலைவர் நெடுமிடல், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் சொ. பாண்டியன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஆசிரியர் வ. நடராஜன், செயலாளர் கோ.குபேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை ஏற்றனர்.
மாநில கழக ஒருங்கிணைப் பாளர் ஊமை. ஜெயராமனுக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் அ. தமிழ்ச்செல்வன் பயனாடை அணிவித்து வாழ்த்து கூறி சிறப்பு செய்தார். வருகை தந்த அனைவருக்கும் ஊமை ஜெய ராமன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளைஞ ரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, கலந்து கொண்டு கருத்துரையாற்றினர். விடுதலை வாசகர் வட்ட செயலாளர் கோ. குபேந்திரன் ஒரு ஆண்டு சந்தா ரூபாய் 2000 வழங்கினார்.
மேலும் தோழர்கள் சிவ லிங்கம், பாண்டியன், சிவகுமார், பச்சையப்பன்,சந்தா வழங்குவதாக அறிவித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், வாசகர் வட்ட துணைத்தலைவர் கு தனசேகரன், தாளநத்தம் வேலுசாமி, நடத்துநர் மாதவன், ஆசிரியர் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர், நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் அ. தமிழ்ச் செல்வன் ஒருங்கிணைத்து நடத்தினார்
பாப்பிரெட்டிப்பட்டி
பகல் ஒரு மணி அளவில் பாப்பிரெட்டிபட்டி மாரி கருணாநிதி இல்லத்தில் அவரது தலைமையில் சந் திப்பு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பேரூ ராட்சி தலைவர் பெரியார் பெருந் தொண்டர் மாரி, பொதுக்குழு உறுப்பினர் வேங்கை. தமிழ்ச் செல்வன், மாவட்ட கழக துணை செயலாளர் வழக்குரைஞர் ரே. வடிவேலன், நகர செயலாளர் பூபேஷ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஜீவிதா ஆகியோருக்கு மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை. ஜெய ராமன், பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமனுக்கு மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, பொதுக்குழு உறுப் பினர் வேங்கை தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் பூபேஷ் ஆகி யோர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர், மாரி கருணா நிதி 5 விடுதலை, பேரூராட்சி தலைவர் மாரி 5 விடுதலை சந்தா, பூபேஷ், வேங்கை தமிழ்ச்செல்வன் ஒரு சந்தா வீதம் மொத்தம் 12 சந்தாக்கள் அளிப்பதாக உறுதி அளித்தனர்.
அரூர்
மாலை 4 மணி அளவில் மாலதி ராஜேந்திரன் இல்லத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. ராஜேந்திரன் தலைமையில் தோழர்கள் சந்திப்பு கூட்டம் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் வடிவேலன், மேனாள் மாவட்ட செயலாளர் பூபதிராஜா, மகளிர் அணி பொறுப்பாளர்கள் கல்பனா, உமா கவிஞர் கீரை பிரபாகரன், ராம்கி,ஒன்றிய இளைஞரணி தலைவர் ராகுல், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சஞ்சீவன், மாணவர் அணி தோழர்கள் அக்ஷயா, ஷாட்சியா ஆகியோருக்கு ஊமை. ஜெயராமன் பயனாடை அணிவித்து கூட்டத்தின் நோக்கத்தை பற்றி சிறப்பு ரையாற்றினார்.
தமிழர் தலைவரால் மாநில ஒருங்கிணைப்பாளராக அறிவிக் கப்பட்ட ஊமை. ஜெயராமனுக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. ராஜேந்திரன் மகளிர் அணி பொறுப்பாளர்கள் கல்பனா, உமா ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து கூறினர். பகுத்தறிவு கலைத்துறை மாநில செயலாளர் மாரி. கருணாநிதி தொடக்க உரையாற்றினார், மாவட்ட கழகத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் வடிவேலன் ஓராண்டுக்கான விடுதலை சந்தாவினை வழங் கினார். மாவட்ட துணைத் தலைவராக ச.பூபதி ராஜா, மாவட்ட மாணவர் கழகத் துணைத் தலைவராக அக்ஷயா மாவட்ட மாணவர் கழகத் துணை செயலாளர் ஆக ஷாட்சியா வையும் கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் நியமனம் செய்து அறிவித்தார். மேற்கண்ட நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.