சென்னை,நவ.15- மழைக் கால விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் செய்தி யாளர்களிடம் நேற்று (14.11.2023) கூறியதாவது:
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந் துள்ளது. இதனால் மழைஎந்த மாவட்டத்தில் அதிகமாகப் பொழிகி றதோ, அங்கு முன்னெச்ச ரிக்கையாக விடுமுறை அளிக்க மாவட்ட நிர் வாகத்திடம் அறிவுறுத்தி யுள்ளோம். அதேநேரம் பொதுத் தேர்வுகளுக்கு முன் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும்.
எனவே, விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.
அரசுப் பள்ளி மாண வர்களுக்கு கடந்த செப் டம்பர் மாதத்திலிருந்து நீட், ஜேஇஇ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நீட் தேர்வு பயிற்சிக்கு 46,216 பேரும், ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சிக்கு 29,279 பேரும், இவ்விரு தேர்வுகளுக்கான பயிற்சிக்கு 31,730 பேரும் என 1,07,225 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கள் வழங்கப்பட்டு வரு கின்றன. தேர்தல், தேசிய நுழைவுத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்வுக்கு 3 விதமான விருப்ப கால அட்டவணைகள் தயா ரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றை இறுதி செய்து ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.
ஒவ்வொரு பள்ளிக் கும் ரூ.25,000 மதிப்பில் விளையாட்டு உபகரணங் கள் வழங்கப்படுகின்றன. கணிசமான பள்ளிகளில் அவ்வாறு வழங்கப்படும் சில உபகரணங்களை மாணவர்கள் ஆர்வமாக எடுத்துப் பயன்படுத்து வது இல்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் பொதுவான விளையாட் டுகள் எவை என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப உபகரணங்களை வாங் கித் தர அறிவுறுத்தியுள் ளோம். இதன்மூலம் பள் ளிகளுக்கு மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய விளையாட்டு உபகரணங் கள் மட்டுமே வழங்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுரு பரன், இயக்குநர் க.அறி வொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண் ணப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.